காந்தமால் பா.ஜ.க. வேட்பாளர் கைது!
அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 125 (A) ஆகிய சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்ற செய்திகள் அடிப்படை இல்லாதவை என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைய அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எவ்விதக் கூட்டணியும் அமைக்காது என ஜெயலலிதா மறுத்துள்ளார்.
மலேசியாவின் ஈப்போ நகரில் நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி இறுதிப்போடியில் இந்திய அணி மலேசியாவை வென்று சாதித்துள்ளது.இதேபோல் பாகிஸ்தான், எகிப்து அணிகளை வீழ்த்திய மலேசிய அணி, நியூசிலாந்து அணியுடனான போட்டியை "டிரா' செய்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த மலேசிய அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு தகுதிபெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இதுவரை இத்தொடரில் ஐந்து முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, நான்கு முறை (1985, 1991, 1995, 2009) கோப்பை வென்றுள்ளது.
இதன்மூலம் இத்தொடரில் இந்திய அணி சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்றுள்ளது. தவிர, இத்தொடரில் இந்திய அணி நான்கு முறை (1983, 2000, 2006, 2007) மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் (தனி) மற்றும், பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
உ.பி.யில் முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான் உள்பட 11 பாஜக தலைவர் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது காலணி வீசிய பத்திரிகையளாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துள்ளனர். விசாரணை விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.முன்னதாக டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீக்கிய கலவரம் குறித்த தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்கின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த நிருபர் ஜர்னைல் சிங் தனது காலணியைக் கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஆனால் காலணி சிதம்பரம் மீது படவில்லை.


மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீபக் சாஹா ராய் இந்த தீர்ப்பை அளித்தார்.
1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீர்பூம் மாவட்டத்தில் போல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முலுக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.
இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.
நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.
எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.
எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.
பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ் எம்.பி யும் நடிகருமான கோவிந்தா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை நக்மாவை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அ.தி.மு.கவில் இருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க. வில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
மார்ச் 30 ஆம் தேதி முதல் கொல்கத்தா-லண்டன் விமான சேவையை முற்றிலும் நிறுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக அளவில், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தலைவர்களின் (G-20) மாநாடு லண்டன் நகரில் தொடங்குகிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதனை முடிவு செய்வதற்காக பா.ம.க பொதுக்குழு கூடியது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது, அதில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க 2453 பேரும் தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க 117 பேரும் வாக்களித்தனர். 10 பேர் நடுனிலை வகித்தனர். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு.
வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னால் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், உத்திரபிரதேசம் முராதாபாத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
கட்சியின் தலைவி சோனியா காந்தி மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் குறிப்பிடும் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அசார் தெரிவித்தார்.



