Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்

Published on: வியாழன், 9 பிப்ரவரி, 2012 //




    செய்தித் துளிகள்!

    Posted: 08 Feb 2012 11:18 AM PST

    செய்தித் துளிகள்!கர்நாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவர் அரசு சிறப்பு வழக்குரைஞராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பதவியை பி.வி.ஆச்சார்யா இன்று ராஜினாமா செய்தார். முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில், ராஜினாமா கடிதத்தை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.


    உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் அமைதி - 62 சதவீதம் வாக்குப்பதிவு

    Posted: 08 Feb 2012 08:41 AM PST

    உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று முதற்கட்டமாக 55 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.


    முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நிறுவனத்தில் சோதனை

    Posted: 08 Feb 2012 08:34 AM PST

    முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விஷாலாட்சி பெயரில்,  பொன்முடிக்கு சொந்தமான, "விஷால் இருசக்கர வாகன முகமை" கடலூர் செல்லாங்குப்பத்தில் இருக்கிறது.


    குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்

    Posted: 08 Feb 2012 08:22 AM PST

    புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் மத்திய தேசிய செயற்குழு உறுப்பினருமான  இல.கணேசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


    கச்சத்தீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது: சுப்ரமணியன் சுவாமி

    Posted: 08 Feb 2012 08:18 AM PST

    பரபரப்புகளின் நாயகனான ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி,  இலங்கை அதிபர் ராஜபக்சேவை  நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இலங்கை பிரச்னைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது என்று தெரிவித்து இருப்பது, பரபரப்பினையும், தமிழீழ ஆதரவாளர்களிடயே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


    ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா வெற்றி!

    Posted: 08 Feb 2012 08:13 AM PST

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள்  ஆட்டத்தில் இந்தியா 4வீரர்களை மீதம்வைத்து வெற்றிபெற்றது.


    போருக்கு சென்ற இளைஞர்கள் பார்-க்கு செல்கிறார்கள்: ராமதாஸ் ஆதங்கம்

    Posted: 08 Feb 2012 08:07 AM PST

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.


    தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு!

    Posted: 08 Feb 2012 03:40 AM PST

    தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு; காரணங்களை அடுக்கும் அரசு!தமிழகத்தில் வரலாறோ, பூகோளமோ  இதுவரை காணாத மின் தடை நடைமுறையிலுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக செய்திகள்  வெளிவந்துள்ளன.


    கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது வழக்கு

    Posted: 08 Feb 2012 02:25 AM PST

    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் ஆகியோர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


    ஆபாசப் படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா!

    Posted: 07 Feb 2012 11:48 PM PST

    கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த  போது அமைச்சர்கள் லக்ஷ்மன்  சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர்   ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப் படுத்தின.


    திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி!

    Posted: 07 Feb 2012 10:18 PM PST

    திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி!சிறப்பாக பணியாற்றாத ஐ.ஏ.எஸ்(இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ்(இந்திய காவல்துறை பணி), ஐ.எஃப்.எஸ்(இந்திய வெளியுறவுப் பணி) மற்றும் ஐ.ஆர்.எஸ்(இந்திய வருவாய் பணி) ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்குக் கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.


    ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை!

    Posted: 07 Feb 2012 09:58 PM PST

    ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை!விழுப்புரம் அருகேயுள்ள வேலியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர், அடையாளம் தெரியாத மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தலைப்புச் செய்திகள்(08/02/2012)

    Posted: 07 Feb 2012 09:19 PM PST

    அதிகாரிகளல்ல; மக்கள் ஊழியர்!

    உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் 'அதிகாரி' என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.


    காவல் துணை ஆய்வாளருக்கு அடி-உதை: நால்வர் கைது

    Posted: 07 Feb 2012 08:47 PM PST

    சென்னை மெரீனா கடற்கரையில் மதுகுடித்துக்கொண்டிருந்தவர்களை "இங்கே மது அருந்தக் கூடாது" என்று அண்ணா சதுக்கம் காவல்நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் கண்டித்தார். சீருடையில் இல்லாமல் இருந்த துணை ஆய்வாளரை அந்த நால்வரும் சராமரியாக அடித்து உதைத்தனர். பின்னர் காவல்துறை அலுவலர்கள் தலையிட்டு துணை ஆய்வாளரை மீட்டனர்.


    என் கணவர் அரசியலுக்கு வரமாட்டார் : ப்ரியங்கா

    Posted: 07 Feb 2012 08:43 PM PST

    காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வத்ரா அரசியலில் ஈடுபட ஆர்வங்காட்டுவதாக அண்மையில் செய்தி வெளியானது. இச்செய்தியை பிரியங்கா திட்டவட்டமாக மறுத்துள்ளார். என் கணவர் ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டார் என்று பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறினார்.


    கவிழ்ந்தது கட்காரி ஏறிய மேடை

    Posted: 07 Feb 2012 08:37 PM PST

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. 







    www.inneram.com


    இந்நேரம்.காம் செய்தித் தளம் சர்வதேச நிகழ்வுகளை உடனுக்குடன் உங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. மேலும் விபரங்களுக்கு: www.inneram.com

    LTTE இயக்கத் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; எனது நண்பர்-கருணாநிதி

    விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; அவர் எனது நண்பர்'' என்று முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். இலங்கைப் பிரச்னை தொடர்பாக மேலும் அவர் ,"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியங்கள் உன்னதமானவை. தமிழீழம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தமிழீழம் என்ற லட்சியம் சரியானது; ஆனால், கையாண்ட முறை தவறானது. பிரபாகரன் குற்றமற்றவர்; அவரது குழுக்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். நான் தீவிரவாதி அல்ல; எனவே பிரபாகரன் எனது நல்ல நண்பர். போரில் அவர் இறக்க நேர்ந்தால் வருத்தப்படுவேன்.

    தமிழீழம் அமையும் நிலை ஏற்பட்டால், சர்வாதிகார ஆட்சி அமையும் என ஒரு முறை பிரபாகரன் பேட்டி அளித்திருந்தார். அதில் எனக்கு ஒப்புதல் இல்லை என நான் கூறினேன். இந்த விஷயத்தில் எனக்கும் பிரபாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது'' என்று முதல்வர் கருணாநிதி பேட்டியில் கூறினார்.

    வீடியோவை காண:-

    தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு - சசி தரூருக்கு பிணை

    கொச்சி : ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிந்து அரசியல்வாதியாய் மாறியுள்ள சசி தரூர் தேசியக் கொடியை அவமதித்ததாக் கூறி அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை வழங்கப் பட்டது. 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்று இரு நபர்களின் பொறுப்பேற்பு அடிப்படையில் மாவட்ட கூடுதல் தலைமை நீதிபதி கிருஷ்ணன் குட்டி பிணை வழங்கினார். மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப் பட்ட போது சசி தரூர் குறுக்கீடு செய்தார் என்று அவர் மீது மனித உரிமை ஆர்வலர் ஜாய் கைதரத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார்.

    மும்பை தாக்குதல் விசாரனை : 109 சாட்சிகளை விசாரிக்க வேண்டும்

    மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரனையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் கூறினார். அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிபுனர்கள் உள்பட பலரும் இதில் அடங்குவர்.

    இந்த வழக்கில் மொத்தம் 1820 சாட்சியாளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்றும் ஆனால் அவர்களில் 109 பேரிடம் மட்டும் விசாரனை மேற்கொள்ள வேண்டும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறினார்.

    கசாப் பஹீம் அன்சாரி மற்றும் சபாதீன் அகமது ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதற்கான காவல்துறை திரட்டிய வரைகலை ஆதாரத்தை நிகாம் சமர்ப்பித்தார். தீவிரவாதிகள் பயன்படுத்திய GPS கருவிகள் ஐந்து கைப்பற்றப் பட்டதாகவும் அவர் கூறினார்.

    வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிக்கை - உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!

    வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    வாக்களிக்கும் தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரனைக்கு வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் சத்வா மாவட்டத்தைச் சார்ந்த அதுல் சரோட் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

    மனுதாரர் சார்பில் வாதடிய பிரசன்னா குட்டி, பெரும்பாலானோர் வாக்களிக்காத காரணத்தால் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே பெறக்கூடிய வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர். அந்தத் தொகுதியின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவளிக்காமலேயே அவர் அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகிவிடுகிறார் என்று கூறினார்.

    வேட்பாளர்களில் எவர் 51 சதவீத வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். எவருமே 51 சதவீத வாக்குகளைப் பெறவில்லை எனில் அங்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

    இணைய தளம் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய தேர்தல் ஆணையம், இணையத்தில் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்வது குறித்து திட்டமிட வேண்டும் என்று அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சைப்ரஸ், கிரீஸ், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் எகிப்து உள்ளிட்ட 20 நாடுகளில் கட்டாய வாக்குப் பதிவு நடைமுறையில் உள்ளதையும் அவர் கூட்டிக் காட்டினார்.

    இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சட்டமியற்றி மக்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரமுடியாது என்று கூறினர். வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே வாக்களிப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று கூறினர்.

    கேரளா மற்றும் சில மாநிலங்களில் மக்களிடையே வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உள்ளதாலேயே வாக்கு வீதம் அதிகமாக உள்ளது, சட்டம் கடுமையாக இருப்பதால் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.

    இந்தியாவில் பல்வேறு தேர்தல்களிலும் 60 சதவீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்படுவதைக் கூறிய அவர்கள் இந்த சதவீதம் திருப்திகரமானது என்றும் கருத்து கூறினர்.

    இலங்கையை ஐ.நா. சபை கண்கானிக்க வேண்டும் : மனித உரிமை அமைப்பு

    இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கண்கானிப்பில் கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

    போர் நடக்கும் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலை மிகுந்த இழிநிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை இது விசயத்தில் அவசரமாக ஈடுபட வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்களின் அமைப்பு (UTHR) கோரி உள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கொழும்பு மட்டுமின்றி, முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள போர் நிறுத்தப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரி உள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் இருந்தால் அந்தப் பகுதி மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையை கேள்விக்குட்படுத்தும் சக்தியைப் பெறுவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - 40 பேர் பலி!

    ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எல்லைப் புறத்தில் உள்ள நங்கர்கர் மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 பதிவானது. இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து 5.1 அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

    முதலில் கிடைத்த தகவல்கள்படி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் காயமுற்றுள்ளனர்.

    கறுப்புப் பணம் 100 நாட்களில் இந்தியா கொண்டு வரப்படும் - அத்வானி!

    தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவரப்படும் என்று அத்வானி கூறினார்.

    இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வாணி, சுவிஸ் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது, அதை எவ்வாறு இந்தியா கொண்டு வருவது என்பதை ஆய்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

    நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அந்த அமைப்பு தன்னுடைய இடைக்கால அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், சுவிஸ் வங்கி மட்டுமின்றி சுமார் 70 நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் உள்ளதாகவும் அவர் கூறினார். இவ்வாறு முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் பணம் சுமார் 6.88 இலட்சம் கோடி ரூபாய் என்றும் அவர் கூறினார்.
    Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!