Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

படகு கவிழ்ந்து 300 பேர் பலியானதாக சந்தேகம்!

Published on: செவ்வாய், 31 மார்ச், 2009 // , , , , , , ,

லிபியாவின் கடல்பகுதியில் படகு கவிழ்ந்து 300 க்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் மரணமடைந்ததாக சந்தேகம். ஐரோப்பாவில் குடியேற சிறிய படகுகளில் சட்டவிரோதமாக புறப்பட்ட ஆப்ரிக்க குழுக்களின் படகுகள், மோசமான காலநிலையில் தகர்ந்ததாக அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இப்படகுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்திருப்பர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 23 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ...

அமெரிக்காவில் 6 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் இந்தியர் ஒருவர். பொருளாதார மந்தநிலையினைத் தொடர்ந்து குடும்ப செலவுக்குப் போதிய வருமானமில்லாததால் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.கேரளாவிலுள்ள வயநாடு அய்யன்கொல்லியிலுள்ள செரியேரியைச் சேர்ந்தவர் அப்பு மாஸ்டர். இவரின் அஸோக். அப்பு மாஸ்டரின் மகளான அபயாவின் கணவர் தேவராஜன். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் சிலிக்கன்வேலி ஸாண்டாக்ளாராவில் பணிபுரிகின்றனர்.சம்பவத்தினத்தன்று, குடும்பத்தினருக்கு இடையில்...

சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!

மக்களவை தேர்தலில் போட்டியிட சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், தன் மீதான தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் சட்டம் தடை விதிக்கிறது. இதனை...

பஞ்சாபில் சாலை விபத்து, 20 புனித யாத்திரிகர் மரணம்!

பஞ்சாப் மாநிலம், அனந்தபூருக்கு அருகில் புனித யாத்திரிகர்கள் பிரயாணம் செய்திருந்த ட்ரக் மறிந்து 20 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர். 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள நைனா தேவி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடி விட்டூ ஊர் திரும்பிக் கொண்டிருந்த யாத்திரிகளின் ட்ரக் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபிலுள்ள லூதியானாவிற்கு அருகில் மச்சிவாரா கிராமத்தில் உள்ளவர்கள் ஆவர். ...

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ்

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்உடுமலை, மார்ச் 30: உடுமலை அருகே உள்ள தளிஞ்சி, தளிஞ்சி வயல் பகுதி மழைவாழ் மக்கள், தேர்தல் குறித்த விவரங்களே அறியாமல் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் எந்தத் தொகுதியை சேர்ந்தவர்கள்,...

தாடியும் பர்தாவும் தாலிபானிசம் - உச்சநீதிமன்றம் அதிரடி!

தாடி வளர்த்துவதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என கோரி மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு கான்வெண்டில் பயிலும் மாணவன் சமர்ப்பித்த வழக்கில், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிச மயமாக்குதலின் பாகம்" என கருத்து கூறிய உச்சநீதி மன்றம், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.மதசார்பற்ற நிலைபாட்டை விசாலமாக்கி இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது எனவும் நீதிமன்றம் கருத்து கூறியது. "நாளை ஒரு பெண் வந்து பர்தா அணிய...

கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ்

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை!திமுக கூட்டணி அறிவிப்பு தொகுதி பங்கீட்டுச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தவித தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திமுக மமக கூறிவந்தன. இந்நிலையில், ம ம க, 2 மக்களவை+1 மாநிலங்களவை என்று கோரிக்கை வைப்பதாகவும், திமுக 1 மக்களவைத் தொகுதிக்கே ஒத்துக்கொண்டுள்ளதால், கூட்டணி மாறுவது பற்றி ம...

நால்வரைக் கொலை செய்த வழக்கில் 46 பேருக்கு வாழ் நாள் சிறை!

மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட...

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள் -

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள்.கோவையைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் சேர்ந்து 'ஆல்கஹால்' வாடைஇருப்பின் வாகனமே செயலிழந்துபோகும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் .மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டுனருக்கு மட்டுமின்றி, எதிரே வரும் வாகனத்தில் அமர்ந்திருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. கோவை நகரில் விபத்தை தடுக்க, காவல்துறை வகுக்கும் வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாகிப் போகின்றன. இச்சூழலில், கோவை வழியாம்பாளையத்திலுள்ள எஸ். என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி...

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடவில்லை" -

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிட்டுவிடவில்லை" என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் வந்த அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்

இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.

நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.

எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.

பயணிகள் மீதான சந்தேகத்தால் விமானம் தரையிறக்கம்.

இன்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கல்கத்தா நோக்கி ஏர் இந்தியா விமானம் 104 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த 3 பயணிகளின் நடவடிக்கையில் விமான பணிப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால்உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மீண்டும் விமானத்தைத் தரை இறக்க விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வானில் பறந்த விமானம்...

லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில்

லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர்....

தீவிரவாதி கசாப்பின் வக்கீல் அஞ்சலி விலகல்!

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாட மராட்டிய மாநில இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து பெறப்பட்ட 17 வக்கீல்களின் பட்டியலில் இருந்து புனேயைச் சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் அஞ்சலி வாக்மாரே என்பவரையும், அவருக்கு உதவியாக ஜுனியர் வக்கீல் ஒருவரையும் நியமனம் செய்து, செசன்சு நீதிபதி தகில்யானி நேற்று உத்தரவிட்டிருந்தார்.தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் அஞ்சலி வாக்மாரே வீடு முன்பு சிவசேனா தொண்டர்கள்...

மேற்கு மும்பை தொகுதியில் நடிகை நக்மா போட்டி?

காங்கிரஸ் எம்.பி யும் நடிகருமான கோவிந்தா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை நக்மாவை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.நடிகர் கோவிந்தா, கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பிஜேபி யின் ராம் நாயக்கை 48,271 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் தேர்தலில் உட்கட்சி பிரச்னை காரணமாக தான்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!