Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தாடியும் பர்தாவும் தாலிபானிசம் - உச்சநீதிமன்றம் அதிரடி!

Published on செவ்வாய், 31 மார்ச், 2009 3/31/2009 09:43:00 PM // , , , , ,

தாடி வளர்த்துவதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என கோரி மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு கான்வெண்டில் பயிலும் மாணவன் சமர்ப்பித்த வழக்கில், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிச மயமாக்குதலின் பாகம்" என கருத்து கூறிய உச்சநீதி மன்றம், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

மதசார்பற்ற நிலைபாட்டை விசாலமாக்கி இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது எனவும் நீதிமன்றம் கருத்து கூறியது. "நாளை ஒரு பெண் வந்து பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நமக்கு அனுமதிக்க முடியுமா?" என நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பினார்.

தான் ஒரு மதசார்பற்றவன் எனவும் இருப்பினும் மத நம்பிக்கைகளை அடிப்படை உரிமைகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறினார்.

மத்தியபிரதேசத்திலுள்ள நிர்மலா கான்வெண்டில் மேல் நிலை பிரிவில் பயிலும் முஹம்மது ஸாலிம், "முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளி சட்டத்திட்டத்தினைக் கேள்விக்குட்படுத்தி சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாடி வளர்ப்பது தன்னுடைய மத உரிமை என்றும் மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக்கூடாது எனவும் எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கதல் செய்திருந்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30 ஆம் பிரிவு படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்குவதற்கு அனுமதியுள்ளது என நீதிமன்றம் விளக்கமளித்தது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸாலிம் பயில்வதற்கு வேறு பள்ளியினைத் தேர்வு செய்தூ கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்தவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, தன்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி அதிகாரிகளின் தெளிவான இரட்டை நிலைபாடு என ஸாலிம் வாதித்த போதிலும் நீதிமன்றம் ஸாலிமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

4 கருத்துகள்

  1. மோடிகளும் சாமியார்களும் அரசாண்டால் பிணந்தின்னுமாம் சட்டங்கள்.

    அப்பட்டமான லூசுத்தனம்

    //தான் ஒரு மதசார்பற்றவன் எனவும் இருப்பினும் மத நம்பிக்கைகளை அடிப்படை உரிமைகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறினார்.//

    அப்டீங்களா, அப்படின்னா, நெத்தியில நாமம் போட்டுட்டும், பட்டை அடிச்சிகிட்டும் வர்ராங்களே, அதுக்கு வக்கணை சொல்லலியே.

    பதிலளிநீக்கு
  2. சீக்கியர்கள் தலைபாகை கட்டகூடாது தாடி வைக்க கூடாதுனு தீர்ப்பு சொல்லி பாருங்களேன் மிஸ்டர் நீதிபதி :)

    பதிலளிநீக்கு
  3. The Hon'ble Justice, failed to realized the fact that keeping beard & observing parda is not an identity of TALIBANISM. Instead, It is taught & made it obligatory for every muslim on the earth. Shaving of beard is considered as HARAAM (STRICTLY PROHIBITED) in Islam.

    Hence the Judgement pronounced by the Justice is unlawful, un-ethical & violation of fundamental rights of the minority (particularly Muslim community) as per the constituitions of India.

    One should not hurt the religious sentiments, ethics & values of the others.

    Hence the Judgement so pronounced shall be over Ruled & all the human beings in India should be allowed to follow the teachings of their religion.

    LET THE JUSTICE PREVAIL...

    பதிலளிநீக்கு
  4. What a theerpu... what a theerpu....

    theerpa mathinal mattum podhadhu... needhipathiyave mathinaldhan nalladhu...

    yeananral ivar marubadiyum Islathin veroru sattathai maatriamaika matar enbadhai yaar kandar....

    UASAB

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!