Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நக்சல் நடமாட்டப் பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு - ஒரு பார்வை

நக்சல் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் முடிவுக்கு வந்தது.

மதியம் 1 மணி அளவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீத வாக்குகளே பதிவு செய்யப் பட்டிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் மதியம் 12 மணி வரை 28.5 சதவீத வாக்குகள் பதிவ செய்யப் பட்டிருந்தன. ஒரிசாவில் மதியம் 1.30 மணி அளவில் 40 சதவீத வாக்குகளும் ஆந்திராவில் 25.67 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

மகாராஷ்டிரா மாநிலம் ராஜனன்ட்காவ்ன் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். ஜாமுஇ மாவட்டத்தில் கன்னி வெடியை வெடிக்கச் செய்தனர்.

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகளில் 9 பாதுகாப்பு அதிகாரிகள், இரு பொதுமக்கள் உள்பட 16 பேர் கொல்லப் பட்டனர்.

பல்வேறு இடங்களில் கன்னிவெடிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. லடேகர் மாவட்டத்தில் 4 தேர்தல் அதிகாரிகளை நக்சல்கள் கடத்திச் சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பீகாரில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண்கள் உள்பட ஆறுபேர் காயமுற்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கோடாபனூர் மற்றும் நராயண்பூர் ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் குண்டுகள் வெடித்தன.

ஒரிசாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டன. வாக்குச் சாவடிகள் மீதும் தாக்குதல் நடைபெற்றன.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தங்கும் விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் 11பேர் பலி!

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். இவர்களில் 9 பேர் காவல்துறையினர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தின் லேடேஹர் மாவட்டத்தில் கன்னிவெடிகளை வெடிக்கச் செய்தபோது, வாக்குச்சாவடியின் பாதுகாப்புக்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 7 பேர் கொல்லப் பட்டனர். அவர்கள் சென்ற வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளரும் இதில் கொல்லப் பட்டனர்.

பீகாரில் கயா மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடி மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு காவலர்கள் கொல்லப் பட்டனர்.

ஒரிசாவில் மல்கான்கிரி மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் வாக்கு இயந்திரத்தையும் ஒரு வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

முதல் கட்ட வாக்குப் பதிவு: பீகாரில் கண்டதும் சுட உத்தரவு!

Published on: புதன், 15 ஏப்ரல், 2009 // , , , , ,
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்க இருக்கிறது. பீகார் மாநிலத்தின் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மற்ற மாநில எல்லைகள் மற்றும் நேபாள எல்லை மூடப்பட்டுள்ளது.

மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க.வின் ராஜீவ் பிரதாப் ரூடி, மத்திய அமைச்சார் மீரா குமார் போன்ற முக்கியப் பிரமுகர்களின் தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்க இருக்கிறது. சுமார் 1.75 கோடி வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதிகளில் 21 பெண்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கலவர சூழல் ஏற்பட்ட அதனைக் காவலர்களால் கட்டுப்படுத்த இயலாது என்ற நிலை உருவானால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்று பீகார் மாநில உள்துறைச் செயலாளர் அப்சல் அமானுல்லா கூறினார்.

ஜனதா தளத்திலிருந்து ஜார்ஜ் பெர்ணான்டஸ் நீக்கம்!

Published on: வெள்ளி, 3 ஏப்ரல், 2009 // , , , , , , ,
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசை ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கிவிட்டதாக அக்கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ் குமார் இன்று தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஜப்பர்பூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட பெர்ணான்டஸ் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

தேர்தலில் பெர்ணான்டஸ் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து அவர் ஜனதா தளத்தில் இல்லை. கட்சியின் முடிவுக்கு எதிராக எவரேனும் போட்டியிட்டால் அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெர்ணான்டசின் உடல்நிலையைக் காரணமாகக் கூறி அவர் போட்டியிட மறுக்கப் பட்டது. ஆனால் தான் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாகக் கூறிய அவர் கடந்த புதன் கிழமையன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பீகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

Published on: வியாழன், 19 மார்ச், 2009 // , , , , , , ,
ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் இணைந்து பீகாரில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அறிவித்தன. அப்போது காங்கிரசுக்கு இரு கட்சிகளும் மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருந்தன. இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி பீகாரில் 26 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடப் போவதாக புதன் கிழமை இரவு அறிவித்தது.

உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இதனைத் தெரிவித்தார். மேலும் உத்திரப் பிரதேசத்திலும் ஏற்கனவே அறிவித்திருந்த 24 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

லாலுவின் மைத்துனர் காங்கிரசில் இணைந்தார்

Published on: புதன், 18 மார்ச், 2009 // , , , , ,
ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.

"நான் காங்கிரசில் இணைவதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களுக்கு (ராஷ்டிரீய ஜனதா தளத்தினருக்கு) என்னுடைய அனுதாபங்களை கூறிவிட்டேன். கண்டிப்பாக நான் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கு, எப்படி என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் இக்பால் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சாது யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வானிடம் லாலு பிரசாத் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

சாது யாதவ் தற்போது கோபால்கன்ஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

ராஷ்டிரிய ஜனதா தளம் - லோக் ஜன சக்தி தொகுதி உடன்பாடு

Published on: செவ்வாய், 17 மார்ச், 2009 // , , , , ,
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும் லோக்ஜனசக்தி கட்சிக்கும் இடைய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா கட்சி 25 தொகுதிகளிலும், லோக்ஜனசக்தி கட்சி 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்றார். மேலும் பேசிய அவர் பாஜக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் என்றார்.

2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி கட்சி 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டது குறிப்பிடத் தக்கது.

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது மூவர் கொலை!

Published on: வியாழன், 12 மார்ச், 2009 // , , , , ,
பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது நடந்த பல்வேறு வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமுற்றுள்ளனர்.

சப்ரா மாவட்டத்தில் இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கோவிந்து யாதவ் மற்றும் நாராயன் யாதவ் என்ற இரு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமுற்றனர்.

ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மற்றொரு நிகழ்வில் ஒரு குழந்தைக்கு குண்டு பாய்ந்து காயமுற்றுள்ளது. மேலும் 16 பேர் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் காயமுற்றனர்.

நவடா மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக ஒரு இளைஞரது வீட்டில் இருந்த மரத்தை வெட்ட அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீகார் வெள்ள நிவாரண உதவி: லாலு ரூ.40கோடி வழங்கினார்.

"கோசி ஆற்று வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பீகார் அரசு, மத்திய அரசு, அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை துடைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள அந்தப் பணியில் நாங்களும் பங்கேற்றுள்ளோம்" என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், ரூ.40 கோடிக்கான இரண்டு காசோலைகளை பீகார் முதலமைச்சரும் தன் அரசியல் எதிரியுமான நிதீஷ் குமாரிடம் அளித்துள்ளார்.

முதல் காசோலை இரயில்வே ஊழியர்களிடம் இருந்து ஒருநாள் சம்பளமாகத் திரட்டப்பட்ட முப்ப்த்தெட்டு கோடி ரூபாய்க்கானது. மற்றொரு காசோலை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ.இரண்டு கோடிக்கானது. இதுதவிர வேஷ்டி, சேலைகள், போர்வைகள் மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை வழங்கப்போவதாகவும் லாலு கூறினார்.

அரசியல் ரீதியான பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இது சரியான நேரம் அல்ல என்று கூறிய லாலு,வெள்ள நிவாரண நிதியாக பீகார் அரசு கேட்ட 14 ஆயிரத்து 800 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என, முதல்வர் நிதிஷ்குமார் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார். லாலுவுக்கு பீகார் அரசு சார்பாக நிதீஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

ராஜ்தாக்கரே தலைமறைவு என நீதிமன்றம் அறிவிக்கை

Published on: செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 // , , , , ,
மகராஷ்டிரா நிர்மான் சேனா தலைவர் தலைமறைவு என ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே பீகார் மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்ததை அடுத்து சுதீர் குமார் பப்பு என்ற வழக்கறிஞர் தாக்கரே மீது 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் ராஜ் தாக்கரே வரவில்லை.

இதனை அடுத்து ஜாம்ஷெட்பூர் 2வது அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில்குமார் ராஜ்தாக்கரே தலைமறைவாக இருப்பதாக இந்திய குற்றவியல் சட்டத்தின் 82 பிரிவின்படி அறிவித்து அறிவிக்கை அனுப்பினார். இந்த அறிவிக்கைக்கு ராஜ்தாக்கரே பதில் அளிக்காவிட்டால் அவரது சொத்துகள் பிரிவு 83ன் படி பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும்.

முன்னதாக ராஜ் தாக்கரையை பிணையில் வரமுடியாத அளவில் கைது ஆணையை நீதிமன்றம் டிசம்பர் 16ஆம் தேதி பிறப்பித்து, மும்பை காவல்துறை ஆணையர் இந்த ஆணையை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது.

ஒரே குடும்பத்தில் 8 பேர் படுகொலை!

Published on: புதன், 11 பிப்ரவரி, 2009 // , , , ,
பீகார் மாநிலம் பகல்பூரில் ஒரே குடும்பத்தில் 8 நபர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பணக்கார குடும்பத்திலுள்ள பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

21 வயது ரத்தன் சிங், 18 வயது காஞ்சன் குமாரியைக் காதலித்து வந்தார். இரு குடும்பங்களிலும் ஆண்டுகணக்கில் பரம்பரை பகை இருந்து வந்துள்ளது. குடும்பத்தாரின் சம்மதம் கிடைக்காது என்பதை உணர்ந்த இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர்.

சமாதானம் பேசலாம் என ரத்தன் சிங்கின் குடும்பத்தினரை அழைத்துக் கொடூரமாக கொலை செய்தனர் காஞ்சன் குமாரியின் வீட்டினர். இது தொடர்பாக 15 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!