ராஜ்தாக்கரே தலைமறைவு என நீதிமன்றம் அறிவிக்கை
மகராஷ்டிரா நிர்மான் சேனா தலைவர் தலைமறைவு என ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே பீகார் மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்ததை அடுத்து சுதீர் குமார் பப்பு என்ற வழக்கறிஞர் தாக்கரே மீது 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் ராஜ் தாக்கரே வரவில்லை.
இதனை அடுத்து ஜாம்ஷெட்பூர் 2வது அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில்குமார் ராஜ்தாக்கரே தலைமறைவாக இருப்பதாக இந்திய குற்றவியல் சட்டத்தின் 82 பிரிவின்படி அறிவித்து அறிவிக்கை அனுப்பினார். இந்த அறிவிக்கைக்கு ராஜ்தாக்கரே பதில் அளிக்காவிட்டால் அவரது சொத்துகள் பிரிவு 83ன் படி பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும்.
முன்னதாக ராஜ் தாக்கரையை பிணையில் வரமுடியாத அளவில் கைது ஆணையை நீதிமன்றம் டிசம்பர் 16ஆம் தேதி பிறப்பித்து, மும்பை காவல்துறை ஆணையர் இந்த ஆணையை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது.
Hi
பதிலளிநீக்குஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த லைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்