Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 09, 2025

இந்தியா பாகிஸ்தானை புரிந்து கொள்ள வேண்டும் -

Published on: திங்கள், 19 ஜனவரி, 2009 // , ,

இன்றுடன் பதவி முடியும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த கான்டலீசா ரைஸ் இந்தியா பாகிஸ்தானை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.பதவி முடியும் தறுவாயில் மூன்று தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரைஸ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருவதாகவும், எல்லை தாண்டிய பயங்கராவாதத்தை ஒடுக்குவதிலும் அக்கறை காட்டி வருவதாகவும் ரைஸ் அப்போது...

பிரபாகரன் வெளிநாடு தப்பினார்?

Published on: //

ஸ்ரீலங்காவில் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்தியத் தாக்குதலில் 31 புலிகள் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ரகசிய படகு நிர்மாணசாலையைத் தகர்த்ததாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கிடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதியான முல்லை தீவினை நோக்கி இராணுவம் நகரத்துவங்கிய நிலையில், பிரபாகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முல்லை தீவை நோக்கியை இராணுவத்தின் முன்னேற்றம் தற்பொழுது மாங்குளம்-முல்லை தீவு சாலைவரை வந்துள்ளது. மிக விரைவிலேயே முல்லைதீவினுள் இராணுவம் நுழையும் எனக்...

மாலேகான் வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி!

Published on: //

11 வயது சிறுமி உட்பட 6 பேர் மரணத்திற்குக் காரணமான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி நகர்கிறது!வெடிகுண்டு தயாரிப்பில் திறமைசாலியான பிரவீன் முதலிக் எனும் நபரைத் தேடி, வழக்கை விசாரிக்கும் மும்பை தீவிரவாதத் தடுப்புப்படை கர்நாடகா விரைந்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்புக்குத் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்து வழங்கிய ராம்ஜி மற்றும் சந்தீப் டாங்கெயுடன் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான பிரவீனும் இருந்ததாக ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது. வெடிகுண்டு...

பாரக் ஏவுகணை விவகாரம்: சி.பி.ஐ இஸ்ரேல் உதவி கோரியது!

Published on: //

இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட 1,150 கோடி ரூபாய்கான பாரக் ஏவுகணை வியாபாரத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் மத்திய புலனாய்வு துறை இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணையில், ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலில் வைத்து நடந்த பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவரங்களை இஸ்ரேல் அரசிடம் சிபிஐ கேட்டுள்ளது.இவ்வொப்பந்தத்தில் உள்ள முக்கிய சில குளறுபடிகள் இஸ்ரேலில் வைத்து நடந்துள்ளதால் அவை தொடர்பான அனைத்து...

வழக்குரைஞர்கள் வேலை

தலைநகர் டில்லி உள்பட இந்தியாவின் வட மாநில மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குறைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களை எதிர்த்து இப்போராட்டம் நடைபெறுகிறது. தலைநகரில் இம்மாதம் வழக்குறைஞர்கள் நடத்தும் மூன்றாவது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இம்மாதம் 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் ஏற்கனவே வேலை நிறுத்தம் நடைபெற்றது.வட மாநிலங்களான டில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு கஷ்மீர்...

ஜார்கண்டில் குடியரசுத்தலைவர்

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஷிபு சோரன் முதல் அமைச்சராகப் பதவி வகிகத்து வந்தார். பதவியேற்றதிலிருந்து ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தற்காலிக முதல்வராகத் தொடர்கிறார்.அவருக்குப் பதில் வேறொரு முதல்அமைச்சரைத்...

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.நான்காவது நாளான நேற்று திருமாவளவனின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. நேற்று மாலை அவர் மயக்க நிலைக்கு போனார். இதையடுத்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். பல்வேறு கட்சித் தலைவர்களும் திருமாவளவன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரினர்.பின்னர் கட்சியின் நிர்வாகக் குழுக்...

தேவாலயத்தின் கூரை விழுந்து ஏழுபேர்

ஞாயிற்றுக் கிழமையன்று பிரேசிலின் மிகப்பெரிய நகரான சாபோலோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் கூரை நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 7 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.தீயனைப்புத் துறையினரும் உதவிக் குழுவினரும் விரைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.2000 பேர் ஒரே நேரத்தில் வழிபடக் கூடிய அளவில் உள்ள இந்த தேவாலயத்தில் சம்பவத்தின் போது 400லிருந்து 500 பேர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று பிரேசிலின் செய்தி நிறுவனம்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!