மும்பை தாக்குதல் விசாரணை இந்தியாவில் நடக்க வேண்டும்
இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து விலக்க வேண்டும் - துருக்கி

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத ஒரு நாட்டை ஐ.நா. சபையின் தலைமையத்திற்குள் எவ்வாறு அனுமதிப்பது என்று துருக்கி பிரதமர் எர்தோகான் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஹமாஸ் இயக்கத்தினரைத்தான் குறி வைத்து தாக்குகிறோம் என்ற பெயரில் பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பறவை மோதி அமெரிக்க விமானம் ஆற்றில் கவிழ்ந்தது
அமெரிக்காவின் ஜெட்விமானம் எண் 1549 ஒன்று பறவை மோதி மன்ஹாட்டனின் புகழ்பெற்ற ஹட்சன் நதியில் கவிழ்ந்தது.நேற்று மதியம் (15-01-2008), லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்தது. 150 க்கும் மேற்பட்ட பயணிகளையும் விமான பணியாளர்களையும், நதியில் இருந்து மீட்டனர்.
வெறும் பறவைகள் ஒரு விமானத்தைக் தகர்க்கும் அளவுக்கு தொழில் நுட்பம் பலவீனமானதாக இருக்கிறதா என்ற ரீதியில் அமெரிக்கா முழுக்க விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன.
இது தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கே காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்
காஸா - பலி எண்ணிக்கை 1100ஐ தாண்டியது


நீதிபதிகள் சம்பளம் மூன்று மடங்கு உயர்வு
மும்பை தாக்குதல் விசாரணை - பாகிஸ்தானில் நடத்தலாம்
துபாயில் கொண்டாட்டம் நிறுத்தம்.
இந்த ஆண்டு ஷாப்பிங் திருவிழா இன்று துவங்குகிறது. ஆனால் இஸ்ரேல் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர் களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய துவக்கவிழா கொண்டாட்டங்களை ரத்துச் செய்து துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகங்களின் பிரதமரும் துணை ஜனாதிபதியுமான ஷெய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுளார்.
இதே காரணத்துக்காகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் துபாயில் ரத்துச் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.
15 ரூபாய்க்காக தாயைக் கொன்ற மகன்
லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்
ஐ.நா. செயலாளர் எகிப்து வருகை
மும்பை சம்பவம் - பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பில்லை : பிரிட்டன்
போலி விமான விபத்து
வட இந்தியாவில் குளிருக்கு 100 பேர் பலி
இந்தியா ஆதாரங்கள் வழங்கவில்லை - பாகிஸ்தான்!
"இந்தியா வழங்கியவை ஆதாரங்கள் அல்ல எனவும் ஆதாரங்கள் என்ற பெயரில் சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளனர் எனவும்" கிலானி தெரிவித்தார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் - முக்கிய சாட்சி மாயம்!
தாக்குதல் நடந்த நாளில் மீன்பிடி படகில் அமர்ந்திருந்த இவர், கப் பரேடிலுள்ள பத்வர் பார்க்கில் படகில் வந்திறங்கிய 6 தீவிரவாதிகளைப் பார்ந்திருந்தார். தாக்குதலுக்குப் பின்னர் ஜெ.ஜெ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இந்த 6 பேரின் உடல்களை இவர் அடையாளம் கண்டிருந்தார்.
இதற்குப் பின்னர் அனிதாவிற்கு மிகுந்த பயம் இருந்ததாக மகள் சீமா கேதல் ஜோஷி கூறினார். சீமா தெரிவித்தப் புகாரின் அடிப்படையில் கப் பரேட் காவல்துறை விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
விப்ரோ நிறுவனத்திற்கு உலக வங்கி தடை
சரக்குந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது
கேம்பிரிட்ஜ் பல்கலை: இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வெற்றி
ஆதாரங்களுக்கு பதில் தராத பாகிஸ்தான்!
இந்தியா சமர்ப்பித்துள்ள ஆதாரங்களுக்கு இதுவரை ஏதும் பதில் தரவில்லை பாகிஸ்தான்.
மும்பை பயங்கரவாதம் தொடர்பான ஆதாரங்களைப் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்தது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சரான ஆனந்த் ஷர்மா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மும்பையின் இப் பயங்கரவாதச் செயலில் தொடர்புடைய தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் அவை மீதான அரசின் நடவடிக்கை பற்றியும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷர்மா.
மேலும், பாகிஸ்தான் இச்செயலைச் செய்தது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்றை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றார்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இனை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பிக்கப் பட வேண்டும் என்று பிஜேபியின் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக நேற்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மிரட்டலைக் குறித்து ஹோட்டல் உரிமையாளர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை ஹோட்டலைச் சுற்றிப் பலத்தப் பாதுகாப்பு போட்டுள்ளது. மின்னஞ்சலை அனுப்பியவரைக் குறித்த விசாரணையும் துரிதபடுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் சமீபத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் நினைவு மறையும் முன், மற்றொரு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய்பாபா கோயில் சுவர் தங்க அலங்காரம் செய்யப்படுகிறது
காஸா நகரை நெருங்குகிறது இஸ்ரேலிய இராணுவம்

கடந்த 16 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 860க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

சிதம்பரம் அமெரிக்கப் பயணம் ரத்து
கற்பழிப்புக்குப் பழி மூன்றுபேர் கொலை
முஸ்லிம் லீக் காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டும் - பிரகாஷ் கரத்
"இஸ்ரேலுடனான மத்திய அரசின் தொடர்பில் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில், ஃபலஸ்தீன் விவகாரத்தில் முஸ்லிம் லீக்கிற்கு மனப்பூர்வமான நிலைபாடு தான் உள்ளது எனில் வெளியுறவு துறை இணையமைச்சர் பதவியிலிருந்து இ.அஹமது ராஜினாமா செய்து வெளியேற வேண்டும். இஸ்ரேலுடனான மத்திய அரசின் உறவை முறிக்க வேண்டும் என்ற லீக்கின் தீர்மானம் வரவேற்புக்குரியது. வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல், மத்திய அரசிலிருந்து இராஜினாமா செய்து வெளியேறினால், லீக்கின் நிலைபாட்டைக் கேரள மக்கள் வரவேற்பர்" என கேரளத்தில் நடக்கும் சி.பி.எம் மத்திய கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காராட்டு தெரிவித்தார்.
"இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமெனில் காங்கிரஸ் தலைமையிலுள்ள அரசை வெளியேற்ற வேண்டும். காங்கிரஸை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை வரவிருக்கும் தேர்தலில் சி.பி.எம் எடுக்கும். ஆனால், எவ்வகையிலும் பாஜக ஆட்சிக்கு வருவதை சி.பி.எம் அனுமதிக்காது. காங்கிரஸ் தவிர்த்த மற்ற மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன."
"சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரவாதத்திற்கு முழு உதவியும் செய்து வருகிறது. உலகில் நடக்கும் அனைத்து தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும் பின்னணீயில் அமெரிக்காவும் இஸ்ரேலுமே செயல்படுகின்றன. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்காமல் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இயலாது" எனவும் அவர் கூறினார்.
பங்காரப்பா மீண்டும் காங்கிரசில் இணைகிறார்?
நந்திகிராம் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி
சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கைது
மூன்றாவது அணி குறித்து ஆலோசிக்கும் சிபிஐ!
"காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றான மூன்றாம் முன்னணி, அரசியல் சூழல்களை அவதானித்து முடிவு செய்வோம்" என சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறினார்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அதற்கான சலனங்கள் கிடைக்கத்துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பணவீக்கம் மீண்டும் குறைந்தது!
கடந்த டிசம்பர் 27 அன்றைய கணக்குபடி அதற்கு முந்தைய வாரக்கணக்கான 6.38 லிருந்து மீண்டும் குறைந்து 5.91 ஆனது. 10 மாதங்களுக்கு இடைப்பட்ட காலயளவில் உள்ள மிகவும் முறைந்த மதிப்பாகும் இது.
உலக அளவில் பொருளாதார மந்தநிலை தொடரும் வேளையில், இந்திய பணவீக்க மதிப்பு குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஸா : 14ஆவது நாளாகத் தொடரும் தாக்குதல்கள்
5வது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்
சினிமா விமர்சனம்: அபியும் நானும்

சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் தலைவர் சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்.
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, முதலமைச்சராகப் பதவியேற்ற இவர் தேர்தல் ஆணைய விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.இதற்காக அவர் கடந்த 3 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலலில் போட்டியிட்டார்.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சிபுசோரன் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து ஜார்கண்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண பதார் வெற்றிபெற்றுள்ளார். இடைத்தேர்தல் முடிவு சிபுசோரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சிபுசோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டார்
அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு: குற்றம்சாட்டப்பட்டவர் கொலை
மாணவியின் கண்ணைக் குருடாக்கிய ஆசிரியை
லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
ஒதுக்கீடு கேட்கும் கப்பல் உரிமையாளர்கள்
காஸா : தொடரும் தாக்குதல்கள்
லாலு ஜப்பான் செல்கிறார்
அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தியர் நியமனம்
இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய வெனிசுலா
முன்னதாக செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றி வெனிசுலா அதிபர் சாவேஸ், வெனிசுலாவில் உள்ள யூதர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று கூறிய தனது உரையைத் தொடங்கினார். இஸ்ரேலியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுவரை 215 குழந்தைகள் மற்றும் 98 பெண்கள் உள்பட 660 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3ஆவது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்
எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நட்டம் ஏற்படுகிறது. எங்களால் தொடர்ந்து இந்த தொழில் செய்ய இயலவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அகில இந்திய போக்குவரத்துப் பேராயத் தலைவர் சரன்சிங் லோஹரா கூறினார். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் கூறினர்.
சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்று அத்தியாவசியப் பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வேலை நிறுத்தத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பதவி விலகு- ஒரிஸா அரசுக்கு உச்சநீதிமன்றம் சூடு
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்தது.
கிருத்துவர்கள் மீது வி.எச்.பி.யினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற நிலையில் சிறுபான்மையினர் காடுகளுக்குள் ஒளிந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட பெஞ்ச் இதை அனுமதிக்க முடியாது என்று கூறியது.
திருமங்கலம் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள்
சில நாட்களுக்கு முன்பு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வாக்காளர்களுக்கு விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்த வரிசையில் இப்போது சாப்பாட்டு இலைக்குக் கீழ் ரூ 2,000 திருநெல்வேலி அல்வா என அன்பளிப்புகள் வழங்கப் படுவதாகத் தெரிகிறது.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்துவரும் திரு வைகோ, "சாப்பாட்டு இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்பட்டு நூதன முறையில் பணம் பட்டுவாடா நடக்கிறது," என்று குற்றம் சாட்டியுள்ளார். "ஆயிரக்கணக்கில் ஆடு, கோழி கறி விருந்துகள் நடத்தப்படுகிறது. அந்த விருந்துகளில் இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்படுகிறது. இது ஊழல் பணம் வெள்ளமாக ஓடுவதைக் காட்டுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே திருமங்கலம் நகராட்சி 13-வது வார்டு முன்சீப் கோர்ட் ரோடு பகுதி, ராமச்சந்திரா தடாக ரோடு போன்ற பகுதியில் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் சில பொருட்கள் வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை அவர்கள் எடுத்துப் பார்த்தபோது 'நூற்றுக்கு நூறு' என்று எழுதப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் அரை கிலோ 'திருநெல்வேலி அல்வா' இருந்தது. அதனுடன் திமுக-வின் விளம்பர பிரசுரங்களும் இருந்தன. ஆனால் இதை யார் தங்கள் வீட்டிற்கு முன் போட்டார்கள் என்பது வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் 'இலவசத்தை கேலி செய்பவர்கள் எல்லாம் இன்று 'இலை' வசம் ஆனவர்கள்' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக அரசின் சார்பில் இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலை வழங்குவதற்கான துவக்க விழாவில் அவர் பேசினார்.
"பொங்கலை முன்னிட்டு இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்குவதை சிலர் கேலி செய்கின்றனர். இப்படி வழங்காவிட்டால் 'நீங்கள் மட்டும் சாப்பிடுகிறீர்கள். ஏழைகள் எதுவும் இல்லாமல் அல்லல்படுகிறார்களே' என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். இலவசமாகக் கொடுத்தால் நாடு உருப்படுமா? என்று கேட்பவர்களும் இருக்கின்றனர்" என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
ஆனால் தேர்தல் ஆணையம் தடை விதித்ததைத் தொடர்ந்து திருமலங்கலம் தொகுதியில் மட்டும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பிறந்த குழந்தை
நெதர்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் ஒரு குழந்தை பிறந்தது. விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி கோரிக்கை
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளதாக தெரிவித்தார்.
சேவை வரியில் மாற்றம்
இன்று மத்திய அரசு அதிகாரிகளுடன் சரக்குந்து உரிமையாளர்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் சரக்குந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றான சேவை வரியை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கிளியரிங் முகமையாளர் (Clearing & Forwarding), பணியாள் சேர்ப்பு முகமையாளர்கள் (Manpower Recruitment), சரக்கு கையாளுநர்கள் (Cargo Handling), சரக்கு காப்பாளர்கள் (Cargo storage and Ware housing) மற்றும் இது தொடர்பான சேவை நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் தங்களின் மற்ற கோரி்க்கைகளும் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு
இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கைலிகள், சேலைகள், தங்க மோதிரம், கறி விருந்து போன்றவற்றை அளித்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் இலஞ்சம் கொடுப்பது போன்ற காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டன. இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் மீது வழக்குத் தொடர உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தி.மு.க. வுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவவிக்கின்றன.
இந்தியா அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்குகிறது
காங்கிரசுடனான உறவு அடுத்தமாதம் பரிசீலனை - பா.ம.க.
கஷ்மீர் முதல்வராக உமர் பதவியேற்றார்

காஸா மீது இராசயண குண்டு வீச்சு

காஸவைச் சுற்றிலும் இஸ்ரேலிய இராணுவம்
சிதம்பரம் அமெரிக்கா நோக்கி..!
அதனைக் குறித்துச் சிதம்பரம் கூறும்பொழுது, "அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கும் தேதி விரைவில் நிச்சயிக்கப்படும். மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான மேலும் ஆதாரங்களை வெளியுறவு துறை அமைச்சகம் திரட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம்" எனக் கூறினார்.
கடந்த தினம், மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர்களைப் பாகிஸ்தானில் வைத்தே விசாரணை செய்யலாம் எனவும் அமெரிக்கா கூறியிருந்தது.
காஸாவினுள் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்தது
இஸ்ரேலிய துறைமுகம் மீது ராக்கெட் தாக்குதல்
டெல்லியில் கடும் பனி மூட்டம்
முஸ்லிம் குடும்பம் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டது
இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு
காஸா மீது தரைவழி தாக்குதல் தொடுக்க அனுமதி
இஸ்ரேலுக்கு ஜெயலலிதா கண்டனம்
பாலஸ்தீனில் மசூதி உள்பட 20 இடங்களில் தாக்குதல்
கஷ்மீரில் துப்பாக்கிச் சன்டை
கிளிநொச்சியில் இலங்கை இராணுவம்?
முன்னதாக வியாழனன்று கிளிநொச்சியின் அருகாமையில் உள்ள பரந்தன் எனும் நகரை இராணுவத்தினர் கைப்பற்றி விட்டதாகவும் 48 மணி நேரத்திற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியிருந்தன.
பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.
ஆப்கானிலுள்ள இராணுவமையத்திலிருந்து வஸீரிஸ்தானிலுள்ள காரிக்கோடு கிராமத்தின் மீது அமெரிக்கப்படையினர் மூன்று ஏவுகணைகளை வீசினர்.பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் அமெரிக்கத்தாக்குதல் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. அமெரிக்கப்படைகள் பாகிஸ்தானிற்குள் அத்துமீறி நடத்தும் இத்தகைய தாக்குதல்களைப் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஹமாஸ் இயக்க பொறுப்பாளர் கொல்லப்பட்டார்
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
ஆப்கானில் 30 காவலர்கள் கொலை
இஸ்ரேலுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
'ஸ்டாப் தி வார் கூட்டணி' என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இந்த அமைப்பின் நிர்வாகி, லிண்ஸே ஜெர்மன் கூறுகையில், தாம் மூன்றாம் முறையாக இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதாகவும், இது இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட மற்றொரு நபரான, கெவின் கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிராக தன் நாட்டில் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்காகத்தான் தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறினார்.
20 வயது அரசு ஊழியர் ஒருவர், ஜார்ஜ் புஷ் மற்றும் கொண்டலிஸா ரைஸ் போன்றவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் போது பொதுமக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
நான்காவது நாளான நேற்றுவரை, சுமார் 350-க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர். 1400 -க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையில், மக்களின் நிவாரண உதவிக்கு வசதியாக, போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையையும் இஸ்ரேல் மறுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஒபாமாவின் கருத்து
இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது, 'இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்பதால் கருத்து தெரிவிக்கவில்லை' என்று பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமையும் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதுவரை 387-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு இணையத்தளத்தில் அரசாணைகள்!
அலுவலகத்திற்குள் காகிதங்கள் இல்லாமலே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துறைகளின் உயரதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் கூட இணையதளத்தில் தரப்பட்டுள்ளன ஆனால், மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைக் கேட்டால், அதற்குப் பதில் கிடைப்பது இல்லை. பெயரளவுக்குதான் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, மக்களுக்கு நேரடியாக பயன் ஏதும் கிடைக்கவில்லை.
தமிழக அரசின் இணையதளத்தில், அன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றி செய்திகள் இடம்பெற்றுள்ளன. பொது மக்களுக்குப் பயனுள்ள தகவலாக அமையும் 'அரசாணைகள்' என்ற ஓர் இணைப்புப் பகுதியும் அந்த இணையதளத்தில் உள்ளது. அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் ஆணைகளில் நேரடியாக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இருப்பவை எல்லாம் துறைவாரியாக இதில் சேர்க்கப்படும். ஆனால் ஓரிரு துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகள் ஓராண்டு வரை இந்தப் பகுதியில் புதிய அரசாணைகளைச் சேர்க்காமலே உள்ளன.
மாநிலத்தில் மின்வெட்டு காரணமாக மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ள எரிசக்தி துறையின் பட்டியலில் அரசாணையின் ஆங்கிலப் பக்கங்கள் 2008 அக்டோபர் 8-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன. 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழக்கம் தீவிரமாக எழுப்பப்படுகிறது. ஆனால், முதல்வருக்கு மிக நெருக்கமான வர்களில் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் துறையில் வரும் இந்த இணைய தளத்தில் தமிழ் அரசாணைகள் 22.10.2002-க்குப் பிறகு சேர்க்கப்படவே இல்லை.
போக்குவரத்துத் துறையில் ஆங்கில ஆணைகள் 13.11.2007-க்குப் பிறகும், தமிழ் ஆணைகள் 1.10.2003-க்குப் பிறகும் புதியவை சேர்க்கப்படவில்லை. கூட்டுறவுத் துறையில் 2008 பிப்ரவரி வரை மட்டுமே அரசாணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையில் ஆங்கில அரசாணைகள் 12.12.2006-க்குப் பிறகு சேர்க்கப்படவில்லை. தமிழ் ஆணைகள் 2008 மார்ச் 10-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஆங்கில அரசாணைகள் 28.5.2008 வரை மட்டுமே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. பிற துறைகளின் அரசாணைகள் ஒன்று முதல் 6 மாதங்கள் வரை சேர்க்கப்படாமல் உள்ளன. உயர் கல்வித் துறையின் ஆணைகள் 2.7.2008 வரையிலும், தகவல் தொழில்நுட்பத் துறை ஆணைகள் 20.9.2008 வரையிலும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளன.
இணையதள வசதி வந்ததும் உடனுக்குடன் தகவல்களை பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்தில்தான் அரசு இணையதளத்தில், அரசாணைகள் குறித்த இணைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் மட்டுமே உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றவே தவிர, மக்கள் விரும்புகிற நேரத்தில் அரசு உத்தரவு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளத்தால் தர முடியவில்லை. அதுவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் மாநிலம் என்ற நிலையில் இப்படியொரு நிலை இருப்பது வருத்தம் தருகிறது என இணையதளத்தில் தகவல்களைத் தேடி சிரமப்படும் கணினி மென் பொருள் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'இந்த ஆணைகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும் வகையில் இருந்தால்தான் நிர்வாகம் வெளிப்படையானதாக இருக்கும்' என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறினார்.
பேங்காக் இரவு விடுதி தீ விபத்தில் 59 பேர் மரணம்
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் இரவு விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் மரணமடைந்தனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.கம்யூனிஸ்ட் தொண்டர் குண்டுவீசி கொலை!

கேரளம்: பாஜக - சி.பி.எம் மோதல்!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே நடக்கும் அரசியல் மோதல்களுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு அடிக்கடி இவ்விரு கட்சியினருக்கும் இடையே மோதல் நடப்பது வழக்கம்.
இதற்காகவே இவ்விரு கட்சியினரும் வெடிகுண்டு, வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை ஆங்காங்கே சேகரித்து வைப்பர். கடந்த இரு மாதங்களில் இம்மாவட்டத்திலிருந்து பலமுறை குவியல் குவியலாக கேரள காவல்துறை வெடிகுண்டுகளைக் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் நேற்றும் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பானூரில் இவ்விரு கட்சியினருக்குமிடையே மொதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களைக் கொன்டு தாக்கிக் கொண்டனர்.
இதில் நாங்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த நாணு, ரவி ஆகியவர்களுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது.
300 பேர் கடலில் மூழ்கி இறந்ததாக சந்தேகம்!
அந்தமான் தீவுகளுக்கருகில் இவர்கள் பிரயாணம் செய்திருந்த படகு சென்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென அடித்த பெருங்காற்றில் நிலைகுலைந்தப் படகு கவிழ்ந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதாக எல்லைப் படையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.
இதுவரை 105 பேரைக் காப்பாற்றியிருப்பினும் 300க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளது உறுதியாகியுள்ளது. இவர்களில் 10 பேரில் உடல்களைச் சமீபத்தில் உள்ள பாறைகூட்டங்களுக்கு இடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
படகில் பயணம் செய்திருந்தவர்களில் பகளாதேஷ் மற்றும் மியான்மரில் உள்ளர்களே அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின் கார் குண்டு வெடித்தது
கைபரில் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்
36 ஆயிரம் கோடி கருப்பு பணம்?
மாலேகாவ்: பாண்டே ஒப்புதல் வாக்குமூலம்!
மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மும்பை மும்பை தீவிரவாத தடுப்புப் படை தலைவர் கார்கரே, மும்பை தீவிரவாதத் தாக்குதலினிடையே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாலேகாவ் வழக்கில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
தற்பொழுது மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேலும் இரு இராணுவ உயர் அதிகாரிகளையும் மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேயின் சகோதரர் மகளையும் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட இந்து அமைப்பு ஒன்றின் தலைவர் தயானந்த் பாண்டே, குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக்கொண்டதாக தீவிரவாதத் தடுப்புப்படை அடிஷனல் கமிஷனர் பரம்பீர் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
தயானத் பாண்டேயின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து முறைகளையும் பேணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5வது நாளாகத் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்

இலங்கை தமிழர் சென்னையில் கைது
"தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது!" - கலிதா ஜியா அறிவிப்பு
'இந்தத் தேர்தல் முடிவுகளை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிக பட்ச எண்ணிக்கையில் வாக்குகள் பதிவு செய்யப் பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதும் நம்பத் தகுந்தது அல்ல. வாக்குப் பதிவில் தில்லுமுல்லுகள் நடந்திக்க வாய்ப்பிருக்கிறது' என்றும் கலிதா ஜியா தெரிவித்தார்.
300 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் கலிதா ஜியாவின் கட்சி 29 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. ஷேக் ஹஸினா தலைமையிலான அவாமி லீக் கட்சி 230 இடங்களை வென்று ஆட்சி அமைக்கிறது.
பா.ஜ.க. அலுவலகத்தில் பணம் மாயம்?
கைபர் வழியை பாகிஸ்தான் மூடியது

இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு
4ஆம் நாளாகத் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்

வங்க தேசத்தில் அவாமி லீக் மீண்டும் ஆட்சியமைக்கிறது
பங்களாதேஷ் தேர்தல்: ஷேக் ஹஸினாவுக்கு வெற்றி வாய்ப்பு!
பங்களாதேஷில் சென்ற திங்களன்று (டிச 29) நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸினாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஷேக் ஹஸினாவின் கட்சி கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.



