உயர்நீதி மன்ற கலவரம் : காவல் அதிகாரிகள் இடைநீக்கம்!
சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி வழக்கறிஞர்கள் - காவலர்கள் இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை இடை நீக்கம் செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் பணித்துள்ளது....