'அழகு சாதன பொருட்கள்' - அரசின் பார்வையில்!
புகையிலை, பான்பராக் போன்ற போதை பொருள்களை பொது இடங்களில் உபயோகிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது தெரிந்ததே.திரைப்படத்தில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்குமாறும் அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டிருந்தார். பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் அழகு சாதனங்களாக நடமாடும் வேதிப்பொருட்களை குறிவைத்துள்ளது.இளம் வயதினரிடையே அழகு சாதன பொருட்கள் மீதும் மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஏராளமான உள் நாட்டு, வெளிநாட்டு...