ஹோலோகாஸ்டை மறுத்த பிஷப் கருத்தை திரும்பப் பெற உத்தரவு
Published on வியாழன், 5 பிப்ரவரி, 2009
2/05/2009 03:36:00 PM //
உலகம்,
போப்,
ஹோலோகாஸ்ட்,
Holocaust,
Pope,
World
ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகள் நடக்கவே இல்லை என்று கூறிவந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட்சன் என்ற பிஷப் உட்பட 4 பிஷப்கள் 1988ஆம் ஆண்டு கிருத்தவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். கடந்த மாத இறுதியில் இந்த நான்கு பிஷப்புகளையும் மீண்டும் கிருத்தவ திருச்சபையில் இணைத்து போப் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ரிச்சர்ட் ஹோலோகாஸ்ட் நடந்தது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கத்தோலிக்க தலைமையகமான வாட்டிகன் நேற்று உத்தரவிட்டுள்ளது. நான்கு பிஷப்புகளும் ஹோலகாஸ்டை மறுப்பவர்கள் என்பது போப்புக்குத் தெரியாமல் இருந்தது என்று நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தப் பிரச்சனையை வாட்டிகன் தவறாக அனுகிவிட்டதாக மூத்த கர்டினல் கூறியதாக பி.பிசி. கூறுகிறது. நால்வரையம் மீண்டும் திருச்சபையுடன் இணைக்க போப் உத்தரவிட்டதும் பல்வேறு யூத அமைப்புகளும் போப்பின் செயலைக் கண்டித்திருந்தன.
0 comments