Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

மூன்று தொகுதிகளில் தனித்துப்போட்டி!

திமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில், அதிமுகவுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக அமையாது போனதால்பதினைந்தாம் மக்களவைக்காக மே 13ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தமுமுக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஜெகதீஷ் டைட்லர்

மக்களவைத் தேர்தலில் டெல்லி வடகிழக்குத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவர் ஜெக்தீஷ் டைட்லர். இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்திற்கு டைட்லரே காரணம் என்று எதிர்கட்சிகள் கூறிவந்தன. ஆயினும் சிபிஐ விசாரணையில் குற்றமற்றவர் என்று அண்மையில் டைட்லர் விடுவிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக, பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது கேள்விகளும் செருப்பும் வீசப்பட்டன. இந்நிலையில், பிரச்னைகளுக்குத் தான் காரணமாக இருக்கவிரும்பவில்லை என்று கூறி...

தமிழ்நாடு: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று

எதிர்வரும் 15ஆம் மக்களவைத் தேர்தலுக்கான தமிழ்நாடு புதுவை தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி, மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத், பிருதிவிராஜ் சவுகான், ஆகியோரும் பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு புதுவைக்கான...

இராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மூவர்

இன்று காலை ஏழு மணியளவில் இராஜஸ்தானின் ஜெய்சால்மீர், பாமர் பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டேர் அளவீட்டில் 5.3 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.15 முதல் 20 விநாடிகளே இந்நிலநடுக்கம் இருந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடங்களில் அரசின் கவனம் திருப்பப்பட்டுள்ளது. ...

தேர்தல் விதி மீறல் பாஜக தலைவர்கள் மீது வழக்குப்

உ.பி.யில் முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான் உள்பட 11 பாஜக தலைவர் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான், எம்.எல்.ஏ. வீரேந்திர சிங் சிரோஹி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மஹேந்திர சிங் யாதவ் உள்பட 11 பாஜக தலைவர்கள் மார்ச் 30-ம் தேதி தடையை மீறி போராட்டம் நடத்தி தேர்தல் விதியை மீறினர். இதுதொடர்பாக...

ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அருணாச்சலப் பிரதேச சுற்றுபயணம்: சீனா கண்டனம்!

அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத் தலைநகர் இடாநகருக்குச் சென்ற பிரதிபா பாட்டீல், எல்லைப் பகுதியான தவாங்கைப் பார்வையிட்டார். இது தொடர்பாக சீனா அதிப்ருதி தெரிவித்தது.சீனாவின் எதிர்ப்பு தேவையற்றது என்றும், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பாகம் என்றும், இந்தியாவின் தலைவர்கள் அங்கு சுற்றுப் பயணம் செய்ய உரிமையுள்ளது எனவும் இந்தியா பதிலடி...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!