Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியா: பணவீக்கம் மிகவும் குறைந்தது.

இந்தியாவின் வணிகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் அது வெறும் 0.44 சதவீதம் என்று இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 7.78 சதவீதமாக இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பண வீக்கம் வெகுவாகக் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது.

உணவுப்பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி கருத்தளிக்கையில் விரைவில் பணவீக்கம் 0% என்ற நிலையை அடையும் என்கின்றனர்.

காங்கிரஸ் 170 தொகுதிகளில் வெல்லும் - கருத்துக்கணிப்பு

பதினைந்தாவது மக்களவையைத் தீர்மானிக்க நடத்தப்படும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அரசு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 170 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு அதிக இடங்கள் கிடைக்குமென்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவில் 17 இடங்களிலும், மே. வங்கத்தில் காங்கிரஸ் - திரிணாமூல் கூட்டணிக்கு 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில் குஜராத், மராட்டியம், கர்நாடகாவில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 30 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சமாஜ்வாடி கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் அதனுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தற்போது காங்கிரசில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், மராட்டியத்திலும், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி உத்தரபிரதேசத்திலும் குறைந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பும் உள்ளது.

பாரதிய ஜனதாவின் செல்வாக்கு நாளுக்குநாள் சரிந்து வருவதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதற்கு அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல்களே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் சங்கிலித்தொடர் உணவகங்களின் உரிமையாளர் ராஜகோபால். அண்ணாச்சி என்று அழைக்கப்படுபவர். தன்னிடம் பணிபுரிந்த சென்னை வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதற்காக வழக்கு விசாரணை நடந்து கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்மு‌றையீடு செய்திருந்தார். அந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பானுமதி, மிஸ்ரா அடங்கிய குழுமம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ளது.

தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மூன்றாம் டெஸ்ட் போட்டி

தென் ஆப்ரிக்காவில் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பந்தடிக்க தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவின் அபாரமான பந்து வீச்சால் 8 விக்கெட்களை இழந்து 205 எடுத்து இருந்தது. அணித்தலைவர், ரிக்கி பான்டிங் மற்றும் உதவி தலைவர் கிளார்க் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி உலக சாதனை புரிந்தனர்.

நியுஜிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா நிதானமான தொடக்கம்.

நியுஜிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை குவித்தது. சச்சின் அபாரமாக ஆடி 70 ரன்களுடனும், யுவராஜ்சிங் 8 ரனகளுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக முதலில் ஆடிய நியுஜிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 279 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தடுமாறிய நியுஜிலாந்து, அணித்தலைவர் வெட்டொரி மற்றும் புதுபுக வீரர் ரைடர் அபாரமான ஆட்டத்தால் 279 ரன்களை எடுத்தது. இருவரும் சதங்களை அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.

முன்னாள் இஸ்ரேலிய அதிபர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றம் அறிவிப்பு


டெல் அவிவ்: முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே கட்சவ் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்நாட்டு அரசு மற்றும் நீதிமன்றம் அவருடன் பதவி விலகுவதற்கு பதிலாக சிறை தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதாக செய்து கொண்ட உடன்படிக்கையை ரத்து செய்துள்ளது.


63 வயது இஸ்ரேலிய அதிபர் தன்னுடன் பணியாற்றி வந்த அலுவலரை கற்பழித்ததாகவும் மற்றும் இரண்டு பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

கட்சவ் தான் மத்திய கிழக்கு பகுதியை சார்ந்தவன் என்பதால் தன்னை சிலர் குறி வைத்து தாக்குவதாக புகார் கூறியிருந்தார்.

அப்பெண்கள் கட்சவ் அதிபராக கடந்த 2007 வரை இருந்த காலத்தில் அவருடன் பனி செய்து வந்தார்கள்.

1998 ல் கட்சவ் ஒரு பெண்ணை தரையில் தள்ளி விட்டு அப்பெண்ணின் பேன்டை உருவி கற்பழித்தார். இரண்டாவதாக அவர் அப்பெண்ணை ஜெருசலேம் ஹோட்டல் ஒன்றுக்கு அலுவல் காரணமாக வரக்கட்டலையிட்டுஅங்கிருந்த அறையில் கற்பழித்தார்.கட்சவ் கோபமுற்ற அப்பெண்ணிடம் நீ நல்ல சுகத்தை அனுபவி என்று கூறி அமைதியாக்கினார்.

௨௦௦௫ ல் அவருடைய 60 வது பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த பெண்ணிடம் பலாத்காரமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின் காரணமாக முன்னதாகவே அவர் பதவி விலகினார்.

நன்றி AP.

9 ஆண்டுகளாக தன் மகளையே வன்புணர்ந்து வந்ததாக தந்தை கைது!

கடந்த 9 ஆண்டுகளாக தன்னுடைய மகளையே வன்புணர்ந்து வந்ததாக 60 வயதுடைய தொழில் அதிபர் ஒருவரை மும்பை மீரா சாலை காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று கைது செய்துள்ளனர். தற்போது 21 வயதாகும் அந்த மகள், தன்னைத் தொடர்ந்து 15 வயதான தன் சகோதரியையும் வன்புணர்ந்ததை அறிந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்தப் பெண்களின் தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மந்திரவாதி 2000ஆம் ஆண்டு இந்த தொழில் அதிபர் குடும்பத்திடம், 12 வயதான தன் மகளிடம் தந்தை உடலுறவு கொண்டால் குடும்பத்தின் எதிர்காலம் செழிக்கும், வருமானம் பெருகும் என்று கூறியதை அடுத்து அவர் இச் செயலில் ஈடுபட்டு வந்ததாக மீரா ரோடு காவல் துறையினர் கூறினர். தொடர்ந்து அந்த மந்திரவாதியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் (பெயரை காவல்துறை வெளியிடவில்லை), மீரா - பையாந்தர் சாலையில் உள்ள கோல்டன் நெஸ்ட் வளாகத்தின் பகுதி 1ல் வசித்து வந்ததாகவும், தொழில் அதிபர் அந்தேரியில் வாகனங்களுக்குப் பொருத்தப்படும் ரேடியம் பிளேட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மந்திரவாதி ரத்தோடுடன் இக்குடும்பத்தினருக்கு 20 ஆண்டுகால பழக்கம் உண்டு என்று கூறிய காவல் துறையினர், தன்னுடைய மூத்த மகளை நீண்ட காலம் அவளுடைய தாயின் முன்னிலையிலேயே வன்புணர்ந்ததாகக் கூறி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜோஸ் பிரிட்ஸல் என்பவர் தன்னுடைய மகளை 24 ஆண்டுகளாகப் பூட்டி வைத்து வன்புணர்ந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து கொண்டுள்ளது. மும்பை நிகழ்வும் ஆஸ்திரேலிய நிகழ்வை ஒத்ததாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பீகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் இணைந்து பீகாரில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அறிவித்தன. அப்போது காங்கிரசுக்கு இரு கட்சிகளும் மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருந்தன. இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி பீகாரில் 26 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடப் போவதாக புதன் கிழமை இரவு அறிவித்தது.

உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இதனைத் தெரிவித்தார். மேலும் உத்திரப் பிரதேசத்திலும் ஏற்கனவே அறிவித்திருந்த 24 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!