Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

சூடான் கலவரம், 57 பேர் கொல்லப்பட்டனர்!

Published on: திங்கள், 2 மார்ச், 2009 // , , , , ,

தெற்கு சூடானில் இராணுவத்தினருக்கும் பிரிவினை போராளிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் சுமார் 57 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொல்லப்பட்டவர்களில் 16 பேர் பிரிவினைவாதிகளும் 18 பேர் இராணுவத்தினருமாவர். காயமடைந்தவர்களில் அதிகமானவர்களும் சாதாரண பொதுமக்களாஅவர். ...

நாடாளுமன்றத்தேர்தல் தேதி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும்,என்று தேர்தல் கமிஷனர் என்.கோபால் சாமி அறிவித்துள்ளார்முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 16-ந் தேதி தொடங்குகிறது.2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது.3-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 30-ந்தேதியும்,4-ம் கட்டத் தேர்தல் மே 7-ந்தேதி,5-ம் கட்டத் தேர்தல் மே 13-ந்தேதி நடைபெறுகிறது.கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும் மே-13ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது.மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று...

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் 61.7 பில்லியன் டாலர் நட்டம்!

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் (AIG) 2008 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 61.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய்) நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க காப்பீட்டு நிறுவத்தின் இந்த அறிவிப்பு பங்கு சந்தைகளில் எதிரொலித்தது.இந்நிறுவனத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசு கூடுதலா 30 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய...

தமிழ்நாடு: +2 தேர்வுகள் இன்று

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளி தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25-ந் தேதியும், மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 18-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ப்ளஸ் டூ எனப்படும் மேல்நிலைப்பள்ளித் தேர்வுகள் இன்று தொடங்கின. 1738 மையங்களில் நடக்கும் தேர்வுகளில் ஆறுஇலட்சத்து எண்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.தேர்வுகளைக் கண்காணிப்பதற்காக 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்....

"தி மு கூட்டணியில் தொடர்வோம்":

திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியை சந்தித்து வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என்றார்.

ஈழப்பிரசினையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும் காங்கிரஸ்ஸுக்கும் கடுமையான கருத்துவேறுபாடும் மோதல்களும் ஏற்பட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விடுதலைச்சிறுத்தைகளை நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் திமுகவை நெருக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனையில் சந்தித்துவந்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் "விடுதலைச்சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து நீக்கமாட்டோம்" என்று தாம் காங்கிரஸை நெருக்கப்போவதாக முதல்வர் தெரிவித்தார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் "எங்களுக்கு திமுகவுடன் தான் கூட்டணி, திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் இல்லை" என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்!

மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கோரி வரும் வேளையில், மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதி மன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.தனிப்பட்ட பழிவாங்கலுக்காகச் செய்யப்படும் கொலைகளுக்கு வேண்டுமானால் மரண தண்டனை அளிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொலை மற்றும் அப்பாவி மக்களை கொலை செய்தல் போன்றவற்றிற்கு மரண தண்டனை விதிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் அரிஜித் பசாயத்...

காங்கிரஸ் திரினாமுல் காங்கிரஸ் கூட்டணி?

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜியை ஞாயிற்றுக் கிழமை இரவு கொல்கத்தாவில் சந்தித்துப் பேசினார். தெற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசவ் ராவும் உடன் இருந்தார்.கூட்டணி குறித்த...

40 கார்களின் இசைக்கருவிகள் திருட்டு!

டில்லியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 கார்களில் இருந்த இசைக்கருவிகள் திருடப்பட்டுள்ளன. டில்லியின் மயூர் விஹார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 40 கார்களின் கண்ணாடிகளை உடைத்து திருடப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை கூறியுள்ளது.ஞாயிற்றுக் கிழமை ஒரு காரின் டிரைவர் சாவியை உரிமையாளரிடமிருந்து வாங்கி காரின் அருகே சென்று பார்த்தபோது அந்தக் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இசைக் கருவி திருடப்பட்டிருப்பதை அறிந்து காரின் உரிமையாளரிடம் சென்று கூறினார். உரிமையாளர்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!