வங்கதேசம்: இராணுவப்புரட்சிக்கு பாகிஸ்தான் தூண்டல்?
வங்காளதேசத்தில் அண்மையில் துணை இராணுவமான எல்லைப் பாதுகாப்பு படையினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டு ஏராளமான அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக்கொன்றனர். இதில் 200 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்து விட்டாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டதுடன் புரட்சிகாரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும்...