Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

ஹமாஸ் இயக்க பொறுப்பாளர்

Published on: வியாழன், 1 ஜனவரி, 2009 //

ஹமாஸ் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மீது கடந்த 6 நாட்களாகக் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதுவரை 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகளும் தாக்குதலை நிறுத்தக் கோரியும் அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் நாள்தோறும் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கிறது.தாக்குதலின் 6ஆம் நாளான இன்று...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்

Published on: //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைக் கண்டிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் லிபியா நேற்று ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தது. அரபு லீக் என்றறியப்படும் 22 அரபு நாடுகள் சார்பாக இந்த தீர்மானத்தை முன்மொழிவாக லிபியா கூறியது.பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா தனது வீட்டோ எனும் மறுப்பு...

ஆப்கானில் 30 காவலர்கள்

Published on: //

ஆப்கானிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹேல்மன்ட் மாநிலத்தில் தாலிபான் ஆதரவாளர்கள் 30 காவலர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் உள்ளூர் அரசு அதிகாரி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்நிகழ்வில் 2 தாலிபான் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டதாகவும் நான்கு பேர் காயமுற்றதாகவும் தாலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அஹமதி கூறினார். 32 காவலர்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். கொல்லப்பட்ட காவலர்கள் மாவட்ட அரசு அதிகாரியின் காவலர்கள்...

இஸ்ரேலுக்கு எதிராக லண்டனில்

Published on: //

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக லண்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.'ஸ்டாப் தி வார் கூட்டணி' என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இந்த அமைப்பின் நிர்வாகி, லிண்ஸே ஜெர்மன் கூறுகையில், தாம் மூன்றாம் முறையாக இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதாகவும், இது இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட மற்றொரு நபரான,...

இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஒபாமாவின்

Published on: //

பாலஸ்தீன காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது பற்றி அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றிருக்கும் ஒபாமா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது, 'இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்பதால் கருத்து தெரிவிக்கவில்லை' என்று பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.இதனிடையே இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமையும் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இதுவரை 387-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 1,720...

தமிழக அரசு இணையத்தளத்தில் அரசாணைகள்!

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் கருதப்பட்டாலும், மாநில அரசின் இணையதளத்தில் இந்த வசதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.அலுவலகத்திற்குள் காகிதங்கள் இல்லாமலே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துறைகளின் உயரதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் கூட இணையதளத்தில் தரப்பட்டுள்ளன ஆனால், மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைக் கேட்டால், அதற்குப் பதில் கிடைப்பது இல்லை. பெயரளவுக்குதான் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, மக்களுக்கு நேரடியாக பயன்...

பேங்காக் இரவு விடுதி தீ விபத்தில் 59 பேர்

Published on: //

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் இரவு விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் மரணமடைந்தனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.பேங்காக்கிலுள்ள பிரபலமான 'சந்திகா' எனும் இரவு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக 1000-த்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தபோது நள்ளிரவு 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலிலும் புகை மூட்டத்தாலும் மூச்சுத் திணறி 53 பேர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் 6 பேர்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!