இஸ்ரேலுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக லண்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
'ஸ்டாப் தி வார் கூட்டணி' என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இந்த அமைப்பின் நிர்வாகி, லிண்ஸே ஜெர்மன் கூறுகையில், தாம் மூன்றாம் முறையாக இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதாகவும், இது இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட மற்றொரு நபரான, கெவின் கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிராக தன் நாட்டில் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்காகத்தான் தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறினார்.
20 வயது அரசு ஊழியர் ஒருவர், ஜார்ஜ் புஷ் மற்றும் கொண்டலிஸா ரைஸ் போன்றவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் போது பொதுமக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
நான்காவது நாளான நேற்றுவரை, சுமார் 350-க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர். 1400 -க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையில், மக்களின் நிவாரண உதவிக்கு வசதியாக, போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையையும் இஸ்ரேல் மறுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
0 comments