Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 09, 2025

மாலேகாவ்ன் : ஆர் எஸ் எஸ்ஸுக்கு எஸ் பணம் ?

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , , , ,

மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் தொண்டர் தயானந்த் பாண்டே என்பவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் பொதுச்செயலர் மோகன் பகவத், ஆர் எஸ் எஸ்ஸின் முஸ்லிம்பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ இடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், இத்தகவலை ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ஷியாம் ஆப்தே தன்னிடம் தெரிவித்ததாகவும்...

சினிமா விமர்சனம் : நான்

நான் கடவுள்ரஸ்ஸல்கதை, திரைக்கதை, இயக்கம்: பாலாவசனம்: ஜெயமோகன்இசை: இளையராஜாதன் மகனால் சொத்து ,சுகம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று சொன்ன சோதிடனின் பேச்சை நம்பிப் பதினாலு வருடங்களுக்கு முன், சாஸ்திரம் படிக்க என்று மனைவியிடம் சொல்லிக் காசியில் தொலைத்த மகனைத் தேடித் தன் மகளுடன் காசிக்குத் தந்தை வருவதுடன் கதை துவங்குகிறது.காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம்...

ஈழப்பிரசினையில் இன்னுமொருவர்

கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அவர் இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று...

காங்கிரஸ்ஸில் அஸ்ஹருத்தீன் : இரண்டாவது

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக 90களில் செயற்பட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்ஹருத்தீன். தனது கிரிக்கெட் வாழ்வை சூதாட்டப் பிரசினையால் முடித்துக்கொண்ட அஸ்ஹருத்தீன் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸாக அரசியல் வாழ்வை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்து காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக அவர் சேர உள்ளதாக ஒரு செய்தியை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே அஸ்ஹருத்தீன்...

"இலங்கைக்கு ஆயுதம் வழங்கவில்லை" -

நேற்று நாடாளுமன்ற மேலவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்து பேசுகையில் அதிமுக எம்.பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா (உள்ளிட்ட சில உறுப்பினர்கள் "இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குகிறதா? இல்லையா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பிரதமர் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் பதில் அளிக்கையில் "இலங்கைக்கு இந்தியா ஒரு போதும் ஆயுதங்கள் வழங்கவில்லை இலங்கை தங்களுக்கு தேவையான ஆயுதங்களை வேறு நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள்" என்று கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியாது என்றும் அரசியல் ரீதியில்தான் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

"நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும்"

நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும் என்று நேபாளம் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். அவர், அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தகால், முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசினார்.

"நேபாளத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்ந்து நீடிப்பதற்கும், அமைதியான சூழ்நிலை ஏற்படுவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்."நேபாள பிரதமருடன் நடத்திய பேச்சில் இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்துடன் தொடர்ந்து நல்ல உறவை வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்" என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்

கடல் வழி அணு ஆயுதக் கடத்தலுக்கு வாய்ப்பு : கப்பற்படைத்

இந்தியாவின் கடல்பகுதி வழியாக அணுஆயுதங்கள் கடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். "பலவீனமாக உள்ள இந்திய கடல் பகுதிகள் வழியாக ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களை சரக்கு கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவர முடியும்" என்றார் அவர்.டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறுகையில் "உலக அளவில் சரக்கு போக்குவரத்தில் 70 முதல் 75 சதவீதம், கன்டெய்னர்கள் மூலமாகவே நடக்கிறது. சட்ட...

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படாது :

இரயில் நிலையங்களுக்குத் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று மத்திய இரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவரது கட்சியைச் சார்ந்த ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) என்ற உறுப்பினரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் வைக்க ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகம் தடை விதித்ததாகவும் அந்த உத்தரவு இன்றும்...

எச்1பி விசா பிரச்சனை : அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க

அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வேலைக்கமர்த்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே நிதி உதவி அளிக்கப் படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கோரியுள்ளது.இந்த நிபந்தனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!