இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ஐ.எஸ்.ஐயின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினெண்ட் ஜெனரல் ஜஹீருல் இஸ்லாம் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையின் ஹீரோவான ஷா நவாஸ் கானுக்கும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கும் உறவினர் என்ற சுவையான தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டதின் கீழ் வழங்கப்படும் குடும்ப (ரேஷன்) அட்டைகளை நிமிட நேரத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ள அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.
மைசூர் : மின்-பயணச்சீட்டு மூலமாக பயணிக்கும்போது அடையாள அட்டை இல்லையென்றால் பயணக்கட்டணத்தை போல் மூன்று மடங்கு அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.
சென்னை - சங்கரன் கோயில் இடைத்தேர்தல் மார்ச் 18 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னணி கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை (07.03.2012) முதல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊழியர்கள் இலங்கையின் வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களிடம் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு எதிராகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (08.03.2012) இத்தாலியத் தலைநகர் ரோமில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கை ஒன்றியத்தின்கீழ் இலங்கையர்கள் அணிதிரண்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பொருப்பேற்க இருக்கும் பிரகாஷ் சிங் பாதல், வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள சங்கரன்கோவில் தொகுதியில் முழுமையான கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. அப்பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலிஃபுல்லாவை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவி்ட்டுள்ளது.
ஜெனின்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் அடாவடித்தனங்களை எதிர்த்து கடந்த 22 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருக்கும் ஹனா அல் ஷலபிக்கு ஆதரவாக பூரின் கிராமத்தவரான மேலும் இரண்டு பலஸ்தீனர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஹ்ரேன் - கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2012) தம் நாட்டுத் தலைநகருக்கு வெளியே அணிதிரண்ட ஆயிரக்கணக்கான பஹ்ரேனிய மக்கள், தமது கலீஃபாவை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 68 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறி கொடுத்தது.
ஏமன் - பாகிஸ்தான்: கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2012) அமெரிக்க யுத்த விமானங்களின் ஏவுகணைத் தாக்குதல்களினால் ஏமன் நாட்டின் அல் பெய்தா மாகாணத்தைச் சேர்ந்த 20 பேரும், பாகிஸ்தானின் பழங்குடியினர் 15 பேரும் பலியாகியுள்ளனர்.
இடைத் தேர்தல் நடைபெற உள்ள சங்கரன்கோவில் தொகுதியில் பணம் விளையாடுவதைத் தடுக்க நாலாபுறமும் 6 இடங்களில் சோதனைச் சாவடிகளைப் போட்டு வாகனங்களை காவல்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
காஸா- கடந்த ஐந்தாண்டு காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத முற்றுகையினால், காஸா மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஸா பிரதேச மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.