அப்ஹா: மன்னர் காலித் பல்கலைக்கழக மாணவிகள் சிலர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அலுவலர்களால் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) பல்கலைக்கழக மாணவர்கள் யாவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்காரா: கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) இஸ்ரேலின் காஸாமீதான படுகொலைத் தாக்குதல்களைக் கண்டித்து துருக்கியத் தலைநகர் அன்காராவில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது.
புது டெல்லி : காங்கிரஸ் கட்சியை பீடித்துள்ள நோயை போன்று பி.ஜே.பியிலும் தொண்டர்களை விட பெரும் எண்ணிக்கையில் தலைவர்கள் இருப்பதால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான "மனசு" சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி 09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.
சங்கரன்கோவில் - சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குட்டிக்கதை கூறி மக்களிடம் ஓட்டு சேகரித்தார். எதிர்கால சந்ததியினருக்காக சிந்தனையோடு ஜெயலலிதா செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 12-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் அவரது இல்லத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
குவைத் சிட்டி : தான் பணியாற்றும் வீட்டு முதலாளியின் மகனை கொலை செய்ய மாதவிடாய் ரத்தத்தை உணவில் கலந்த வேலைக்காரப் பெண்மணியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்துக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி மத்திய அரசின் இப்பாரபட்ச போக்கால் ஏலம் விட்டால் கூட ஏலம் எடுப்பதற்கு யாரும் தயங்கும் நிலையில் மோசமான மாநிலமாக மேற்கு வங்காளம்உள்ளது என்று கூறியுள்ளார்.
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தேமுதிக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
புது டெல்லி: விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூர் : தன்மீது சுமத்தப்பட்டிருந்த சுரங்க மோசடி புகார் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தன்னை முதல்வராக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த எடியூரப்பாவின் கோரிக்கையைப் பாஜக தலைவர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார்.
உத்தரபிரதேசம்: வரும் மார்ச் 15 ஆம் தேதிஉத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ், தன் கட்சி தொண்டர்களின் வன்முறை செயல்களைச் சமாளிப்பதே அவர் எதிர்கொள்ளும் பெரும்பிரச்சனையாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி மு க வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடிகை குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
காஸா- கடந்த ஐந்தாண்டு காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத முற்றுகையினால், காஸா மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஸா பிரதேச மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
0 comments