Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கிருஷ்ணகிரி குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் சதியா?

Published on வெள்ளி, 9 மார்ச், 2012 3/09/2012 02:06:00 PM //

சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!

Posted: 08 Mar 2012 02:06 PM PST

சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!நேற்றுமுதல் சூரியனின் மேற்பரப்பில் கடும்புயல் வீசுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் உருவான புயல் பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால் அடுத்த24 மணிநேரத்திற்குள் விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், தகவல் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என நாசா அறிவியல் ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


ஈரானின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - இஸ்ரேல்

Posted: 08 Mar 2012 01:50 PM PST

ஈரானின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - இஸ்ரேல்ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து வளைகுடாவில் போர்மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் அணு ஆயுத சோதனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரான் முன்வந்துள்ளது.


ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் விபரீதம் 175 பேர் பாதிப்பு

Posted: 08 Mar 2012 01:23 PM PST

 ஹோலி பண்டிகை, மும்பை, வாந்தி, மயக்கம் Holi celebration, Mumbai, giddiness and vomitingவண்ணப்பொடிகளைத் தூவி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மும்பை தாராவியில் நடந்த கொண்டாட்டத்தின்போது அங்கு தூவப்பட்ட வண்ணப்பொடியில் கலந்திருந்த ரசாயன விஷம் காரணமாக 175 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா வீட்டை தகர்க்கப்போவதாக தொலைபேசி மிரட்டல்

Posted: 08 Mar 2012 01:40 PM PST

the telephone threat to tamil Nadu Chief Minister Jayalalitha's house demolished!தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த தம்பதி கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


பெண்களுக்கு இலவச முதுநிலைப் பட்டப் படிப்பு - பஞ்சாப் முதல்வர்

Posted: 08 Mar 2012 01:01 PM PST

பெண்களுக்கு இலவச முதுநிலைப் பட்டப் படிப்பு - பஞ்சாப் முதல்வர்நடந்து உடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம், பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. வரும் 14-ஆம் தேதி நடக்கவுள்ளபதவியேற்பு விழாவில் பிரகாஷ் சிங் பாதல் 5-ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். 85 வயதான பிரகாஷ் சிங் பாதல் ஏற்கனவே 4 முறை பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார்.


பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரயில் பாதை - டி.ஆர் பாலு கோரிக்கை

Posted: 08 Mar 2012 12:49 PM PST

பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரயில் பாதை - டி.ஆர் பாலு கோரிக்கைதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசியபோது தமிழகத்தில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தக் கோரும் கோரிக்கை மனுவை அளித்தார், அதில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குதல், புதிய ரயில் சேவைகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.


சவுதியிலிருந்து கல்விக்கு உதவும் தமிழ் தன்னார்வல அமைப்பு

Posted: 08 Mar 2012 10:53 AM PST

கடந்த இருபது வருடமாக ஜித்தாவில் தமிழ் நாட்டு தன்னார்வலர்களால் செயல்படுத்தப் பட்டு வரும் மெப்கோ (MUSLIM EDUCATIONAL PROMOTION COUNSEL)என்ற அமைப்பு, நலிவுற்ற, நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு. நிதியுதவி செய்து அவர்களை சிறந்த கல்வியாளர்களாக, உருவாக்கி வருகிறது.


சங்கரன்கோவிலில் பதற்றத்தை தணிக்க 5 கம்பெனி ரிசர்வ் போலிஸ் வருகை

Posted: 08 Mar 2012 06:43 AM PST

சங்கரன்கோவிலில் பதற்றத்தை தணிக்க 5 கம்பெனி ரிசர்வ் போலிஸ் வருகைசங்கரன்கோவில்  தொகுதிக்குள் குண்டர்களை குவித்துள்ளதாக தகவல் வெளியானதால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பதற்றத்தை தணிக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திடவும் 5 கம்பெனி மத்திய ரிசர்வ் காவலர் படையினர் வரவழைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் குண்டர்கள்! பீதியில் சங்கரன் கோவில்

Posted: 08 Mar 2012 05:51 AM PST

A.K.47 guns and rowdies in sankaran kovil! Voters in fearநெல்லை: சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஒருவரிடம் ஏ.கே 47 ரக துப்பாக்கி இருந்துள்ளது. மேலும் அங்கு குண்டர்கள்  குவிக்கப்பட்டு இருப்பதாக  கிடைத்த தகவலையடுத்து அங்கிருக்கும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது. இதனால் அத்தொகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.


'கொலவெறி'யால் பொதுமக்கள் அவதி

Posted: 08 Mar 2012 05:45 AM PST

சென்னையில் ரயிலில் 'கொலவெறி' என்ற சினிமா பாடலை பாடி  பொதுமக்களை தொந்தரவு செய்த நான்குபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சையையும் விமர்சனங்களையும் பெற்ற திரைப்பட பாடலான, நடிகர் தனுஷின் 'கொலவெறி' என்ற சினிமா பாடலை, சென்னை சைதாப் பேட்டையில் ரயிலில் ஏறிய 4 பேர், குடிபோதையில் இந்த பாடலை பாடி, பெண்களை கிண்டல் செய்ததாக கூறப் படுகிறது.  மேலும் நடிகர் தனுஷை போலவே லுங்கி அணிந்து நடனமாடி மற்ற பயணிகளையும் கூச்சல் போட்டு தொந்தரவு செய்துள்ளனர்.   இதனை தொடர்ந்து ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டு, ரகளை செய்த  4 பேரையும், ரெயில்வே காவலர்கள் கைது செய்துள்ளனர்.  சென்னையில் ரயிலில் 'கொலவெறி' என்ற சினிமா பாடலை பாடி  பொதுமக்களை தொந்தரவு செய்த நான்குபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 08 Mar 2012 05:27 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}


தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் புதுவை மாணவர்களுக்கு 10 பதக்கங்கள்!

Posted: 08 Mar 2012 05:24 AM PST

 National roller scatting competition! Puducherry students won 10 medals  புதுச்சேரி: சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சறுக்கு விளையாட்டு (ஸ்கேட்டிங்) போட்டிகளில் புதுச்சேரி பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் 10 பதக்கங்களை அதிரடியாக வென்றுள்ளனர்.


மனிதன் பாதி

Posted: 08 Mar 2012 04:44 AM PST

தனக்குப் பிடிக்கவே பிடிக்காத எதிர்வீட்டுக்காரரை "இங்கே வா" என்று அழைத்தார் அவர். அழைத்தவர் மனநிலை சரியில்லாதவர். வயது அறுபதுக்குமேல் இருக்கும். அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு அவர் 'மென்ட்டல்' மாமா. ஆனால் அவரிடம் நேரில் பேசும்போது மட்டும் மாமா என்று சுருக்கிவிடுவார்கள்.


அஸாருத்தீனுக்கு ரூ. 15 இலட்சம் அபராதம்

Posted: 08 Mar 2012 04:12 AM PST

 

அஸாருத்தீனுக்கு  ரூ. 15 இலட்சம்  அபராதம்மொராதாபாத் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவருமான அஸ்ஹருத்தீனுக்கு டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் 15 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


சவூதி அரேபியாவில் சிக்குண்ட இரு தமிழர்களை மீட்க உதவுங்கள்

Posted: 08 Mar 2012 04:20 AM PST

சவூதி அரேபியாவில் சிக்குண்ட இரு தமிழர்களை மீட்க உதவுங்கள்இந்நேரம் ஆசிரியர் அவர்களுக்கு உங்கள் வாசகர் எழுதுவது..!!

சவுதி அரேபியாவிலிருந்து எனது நண்பன் இன்று ஓரு மின் அஞ்சல் அனுப்பினான் அதை நான் தாங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்..! தாங்கள் அதிலுள்ள உண்மை நிலையை கண்டறிந்து தங்களின் இணையதளம் மூலமாக அவர்களுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..


சவூதி: கவனக்குறைவு மருத்துவருக்கு மூன்று இலட்சம் ரியால் அபராதம்

Posted: 08 Mar 2012 03:23 AM PST

சவூதி: கவனக்குறைவு மருத்துவருக்கு மூன்று இலட்சம் ரியால் அபராதம்சவூதி அரேபியா: அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரியால்கள் அபராதம் விதித்து சவூதி ஷரியா சுகாதார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


சவூதி: கோடீஸ்வரர் நிறுவனம் சம்பள பாக்கி

Posted: 08 Mar 2012 03:11 AM PST

சவூதி: கோடீஸ்வரர் நிறுவனம் சம்பள பாக்கிசவூதி அரேபியா: 'பேரு பெத்த பேரு; தாக நீலு லேது' என்பது ஒரு தெலுங்குப் பழமொழி. இப்பழமொழிக்குச் சான்றாக இச்செய்தியைக் குறிப்பிடலாம். சவூதி நிறுவனம் ஒன்று தமது ஊழியர்களுக்குச் சம்பளம் தராமல், சரியான வாழ்வாதரங்களையும் வழங்காமல் இருப்பது பற்றி முன்னரும் குறிப்பிட்டிருந்தோம். அவ்வகையில் சவூதி கோடீஸ்வரர் ஒருவர் தமது நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஒருவருட காலம் சம்பளம் வழங்காமல், இலண்டன் சென்றுவிட்டதாக, அரபு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வூழியர்கள் பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.


சவூதி: சம்பள விவகாரத்தைக் கண்காணிக்கும் குழு அமைப்பு

Posted: 08 Mar 2012 03:00 AM PST

சவூதி: சம்பள விவகாரத்தைக் கண்காணிக்கும் குழு அமைப்புசவூதி அரேபியாவிலுள்ள நிறுவனங்கள் தத்தம் ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்க ஊழியர்நலத்துறை அமைச்சகம் தேசிய ஊழியர் குழுமத்தை (National Labour Committee) அமைத்திருந்தது.  இக்குழுமம் வரைந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மேற்பார்வையும் மீள்பார்வையும் செய்யும் இறுதிக்கட்டத்தில் அமைச்சக அதிகாரிகள் உள்ளதாக அரபு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கிருஷ்ணகிரி குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் சதியா?

Posted: 08 Mar 2012 12:19 AM PST

கிருஷ்ணகிரி குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் சதியா?கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டீக்கடை ஒன்றில் வெடித்த குண்டில் இராணுவ வீரர் ஒருவர் பலியானார். தலைமறைவாகியுள்ள அவர் நண்பரைக் காவல்துறை தேடி வருகிறது.


ரூ.2 லட்சம், ஐபேட் கையூட்டு! புலனாய்வுத்துறை இயக்குனர் ராஜன் கைது!

Posted: 08 Mar 2012 01:29 AM PST

ரூ.2 லட்சம், ஐபேட் கையூட்டு! புலனாய்வுத்துறை இயக்குனர் ராஜன் கைது!சென்னை: சுங்கத்துறையில் நடத்திய பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டவர் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குநர் ராஜன். இவர் ரூ. 2 லட்சம் மற்றும் ஐபேட் போன்றவற்றை கையூட்டாகப் பெற்றதாக ராஜன் மற்றும்அவரது கார் ஓட்டுனர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மத்திய, மாநில அமைச்சர்களை கண்காணிக்கும் உளவுப்படை!

Posted: 08 Mar 2012 12:01 AM PST

மத்திய, மாநில அமைச்சர்களை கண்காணிக்க உளவுப்படை!நெல்லை : மத்திய மற்றும் மாநில அமைச்சர்களை 35 உளவுப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன இவை அமைச்சர்களின் நடவடிக்கைகளை கவனித்து உடனுக்குடன் தகவல்களை தங்களது மேலதிகாரிகளுக்கு அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்!

Posted: 07 Mar 2012 11:54 PM PST

சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்நவீன கால அரசியல் வரலாற்றில் எகிப்தியப் புரட்சி மிகப் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. புரட்சி வரலாற்றில் "பிரான்ஸியப் புரட்சி" பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி விஞ்சிவிட்டது என்றால், அது மிகையில்லை.


பிரியாணி, மதுபானத்துடன் அமர்க்களப்படும் சங்கரன்கோவில் தொகுதி

Posted: 07 Mar 2012 11:02 PM PST

பிரியாணி, மதுபானத்துடன் அமர்க்களப்படும் சங்கரன்கோவில்சங்கரன்கோவில்: எதிர்வரும் இடைத்தேர்தலால் சங்கரன்கோவில் தொகுதி களைகட்டியுள்ளது அரசியல் கட்சி அலுவலகங்களில் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது


+2 தேர்வுகள் துவங்கின!

Posted: 07 Mar 2012 09:43 PM PST

+2 தேர்வுகள் துவங்கியது!சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 ஆண்டு பொதுத் தேர்வுகள் இன்று காலை துவங்கின.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 07 Mar 2012 10:14 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


என்னை அடக்க நினைத்தால் அது நடக்காது: விஜயகாந்த் ஆவேசம்!

Posted: 07 Mar 2012 09:10 PM PST

என்னை அடக்க நினைத்தால் அது நடக்காது: விஜயகாந்த் ஆவேசம்!சூலூர்: கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.கே.தினகரனுக்கும், சூலூரை அடுத்த காரணம்பேட்டையை சேர்ந்த பி.சிந்து சரண்யாவுக்கும் திருமணம்  சூலூர் சிந்தாமணி புதூரில் உள்ள ஏ.கே.ஏ. திருமண மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது.


பரிதி இளம்வழுதி வீடுகளில் கையூட்டு ஒழிப்புத்துறை சோதனை!

Posted: 07 Mar 2012 08:59 PM PST

பரிதி இளம்வழுதி வீடுகளில் கையூட்டு ஒழிப்புத்துறை சோதனை!வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவான புகாரின் அடிப்படையில் கடந்த தி.மு.க.அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பல அமைச்சர்களின் வீடுகளில் கையூட்டு ஒழிப்புத்துறையினர்  ஏற்கனவே சோதனைகள் மேற்கொண்டனர்.


தலைப்புச் செய்திகள்(08/03/25012)

Posted: 07 Mar 2012 08:29 PM PST

அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.






Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!