Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

புஷ் மீது ஷூ வீசியவருக்கு மூன்று வருட

முந்தஸர் அல் ஜைதி. தொலைக்காட்சி நிருபரான இவர், தன்ஆட்சியின் கடைசி காலத்தில் பாக்தாத் வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மீது ஷு வீசியதால் ஒரே நாளில் புகழடைந்தவர்.செய்தியாளர்கள் கூட்டத்தில் புஷ் பேசிக்கொண்டிருக்கையில் முந்தசர் திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி, நாயே இதுதான் ஈராக் மக்கள் உனக்குத் தரும் கடைசி முத்தம் என்று கூறி அடுத்தடுத்து எறிந்தார். ஷூ தன் மீது...

முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அறிவிக்கை!

லக்னோவில் நடைபெற்ற ஹோலி பண்டிகை விழாவொன்றில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆளுக்கொரு நூறு ரூபாய் கொடுத்த விவகாரம் பிரசினையாகி உள்ளது.இந்தக் காட்சிகள் தொ.கா ஒன்றில் வெளியானது. இதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு எதிர்கட்சிகள் எடுத்துச் சென்றன. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு முலாயம்சிங் யாதவ்வுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. ...

காங்கிரஸ் - திரினாமுல் காங்கிரஸ் தொகுதி

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திரினாமுல் காங்கிரஸ் காட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப் பட்டுள்ளது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது.மம்தா பானர்ஜிக்கும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கேசவ் ராவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ...

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது மூவர் கொலை!

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது நடந்த பல்வேறு வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமுற்றுள்ளனர்.சப்ரா மாவட்டத்தில் இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கோவிந்து யாதவ் மற்றும் நாராயன் யாதவ் என்ற இரு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமுற்றனர்.ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மற்றொரு நிகழ்வில் ஒரு குழந்தைக்கு குண்டு பாய்ந்து காயமுற்றுள்ளது. மேலும் 16 பேர் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் காயமுற்றனர்.நவடா மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக...

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர்

ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!