திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
Published on வியாழன், 2 ஏப்ரல், 2009
4/02/2009 10:24:00 AM //
தமிழகம்,
திமுக,
தேர்தல் 2009,
dmk,
Election 2009,
Tamilnadu
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு "வெற்றி நமதே" என்று பெயரிடப் பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய விசயங்கள் வருமாறு:
- இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
- இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
- நெல் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அரசை திமுக வலியுறுத்தும்
- மாநில நதிகளின் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்குமாறு திமுக கோரிக்கை விடுக்கும்.
- தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட கோரிக்கை
- அருந்ததியினருக்கு அனைத்து மாநிலத்திலும் இடஒதுக்கீடு தர கோரிக்கை
- ஊரக வேலைவாய்ப்பு 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
- எஸ்.சி. எஸ்டிக்கு இலவச கல்வி
- அரவாணிகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்க திமுக வலியுறுத்தும்
- அகில இந்திய அளவில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம்
- பொருளாதார சரிவில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி அளிப்பது.
கழக பேச்சாளர்களே
பதிலளிநீக்குகாங்கிரசு கட்சி ஆட்சி செய்த இந்த 5 ஆண்டு காலத்தில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
69 ஆயிரத்து 64. அதாவது உரத்தட்டுப்பாடு, விவசாய பயிருக்கு சரியான விலை கிடைக்காதது, கடன் ..இத்யாதி என்று பல பிரச்சனைகள். விவசாயத்தில் தான் இந்தியா வாழ்கிறது ??? எப்படி என்பது பற்றி இந்தியாவை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் சோனியா அம்மையாரிடமும்?!! சிவகங்கை மாவட்டத்தில் வற்றாமல் கொட்டிக்கிடக்கும் கிராபைட் என்ற வளத்தை தோண்டி எடுத்து அந்த மாவட்ட மக்களை செழிக்க வைக்க தெரியாத சிறந்த நாடாளுமன்ற வாதி ப.சிதம்பரத்திடமும், எல்லாம் தெரிந்த பொருளாதார மேதை மன்மோகன் சிங்கிடமும் தான் கேட்க வேண்டும்.
மாநில அரசு சாதனை பற்றி சிறிது பார்க்கலாம்.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் தரிசாக கிடக்கும் 50 லட்சம் ஏக்கர் நிலங்களை தலா 2 ஏக்கராக பிரித்து கொடு்க்கப்படும் என்றார் கலைஞர். நடந்தது என்ன? முதலைமச்சர் நாற்காலியில் என்ற உயரத்தில் உட்கார்ந்து் பார்த்த போது தான் தமிழ்நாட்டில் வெறும் 1 லட்சம் ஏக்கர் தரிசுநிலம் தான் இருப்பதாக தெரிய வந்ததாம். ஆக...இது வரை பிரித்து தரப்பட்ட 2 ஏக்கர் நிலங்களை பெற்ற அதிர்ஷ்ட விவசாயிகள் யார்? அவர்கள் அந்த நிலத்தில் மாங்காய்கள் எங்கே?
கரும்புக்கு சாகுபடி செலவு 1990 ரூபாய் ஆகிறது. இதுவரை கரும்பு விவசாயிகள் இந்த பணத்தை பார்த்திருக்கிறார்களளா?
தமிழகமக்களின் முக்கியமான உணவு பொருளான அரிசி கிலா விலை சுமார் ரூ.38.
மத்தியஅரசு யுத்த தளவாடங்களை இலங்கைக்கு அனு்ப்புகிறது. இப்போது கூட இந்திய ராணுவத்தின் சக்திவாய்ந்த பீரங்கிகளும், ராணுவ நிபுணர்களும் இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளார்கள் என்ற உறுதியான தகவல் கிடைத்தும் கூட மத்திய அரசை கருணாநிதி எந்த கேள்வியும் கேட்கவில்லை. வழக்கம் போல் போரை நிறுத்த சொல்லி பேக்ஸ் அனுப்புவர்.
இலங்கை ராணுவம் அப்பாவிகளை கொல்லவில்லை என்று நேரில் பார்த்தது போல் பேசுவார். ஆனால் இவரது அமைசசர் தா.கிருஷ்ணன் நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். டெல்லியில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர், உங்கள் மகன் தான் இந்த கொலையில் ( தற்போது மதுரை எம்.பியாக போட்டியிட உள்ள அழகிரி) குற்றவாளி என்று கூறப்படுகிறதே என்று கேட்க....சீறி எழுந்த கருணாநிதி, யார்டா நீ....நான் சொல்றேன்.நீ தான் அந்த கொலையை செஞ்சவன்..என்று வெடிக்க ஆடிப்போனார் அந்த பத்திரிகையாளர்.
இப்படி இடத்திற்கு இடம் வசனம்...அய்யகோ...மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். அரசியல்வாதிகளுக்கு ஒரே பார்முலா..எவனும் எதையும் ஞாபகம் வெச்சுக்க மாட்டான்..அள்ளிவிடுங்கோ...கழக உடன்பிறப்புகளே.நம்புவார்கள் தமிழர்கள்.