இந்திய அரசு வாங்கும் அதிநவீன விமானங்கள்
அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட அதிநவீன விமானங்கள் மூன்று இந்திய அரசின் கேட்பின்பேரில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏவுகணைகளும் தகர்க்க முடியாத தொழில்நுட்பத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன,
இந்த அதி நவீன விமானத்தில் 48 பேர் வரை பயணம் செய்ய முடியும். நிற்காமல் 6 ஆயிரம் மைல் பறக்கக் கூடிய இந்த விமானத்தில் பறந்தபடியே உலகின் எந்த பகுதியில் இருப்பவருடனும் பேச முடியும். அவசர காலத்துக்கு ஏற்ப இயங்கும் வகையில் இதன் எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தமாத இறுதியில் இருந்து இந்த விமானம் பயன்பட்டுக்கு வர உள்ள இவ்விமான சேவையை குடியரசுத்தலைவர் பிரதிபா பட்டீல் தொடங்கி வைக்கிறார்.
மூன்று விமானங்களில் குடியரசுத்தலைவருக்கு ஒன்று, பிரதமருக்கு ஒன்று போக மூன்றாவது விமானம் வெளிநாட்டுத்தலைவர்கள் வருகையின் போதும் பயன்படுத்தப்படுமாம்.
0 comments