கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும்
Published on புதன், 4 பிப்ரவரி, 2009
2/04/2009 03:43:00 PM //
அமெரிக்கா,
உலகம்,
கிர்கிஸ்தான்,
ரஷ்யா,
Afganistan,
America,
Russia,
World
கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார்.
செவ்வாய் கிழமை பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் கைபர் வழியில் உள்ள பாலத்தை தாலிபான் ஆதரவாளர்கள் வெடிவைத்து தகர்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் அதிபர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அறிவித்திருப்பதால் ரஷ்யாவின் தூண்டுதலினாலேயே இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கிர்கிஸ்தான் ரஷ்யாவிடம் பெற்றிருந்த 180 மில்லியன் டாலர் கடன் தொகையை ரத்து செய்துவிட்டதாகவும், மேலும் 150 மில்லியன் டாலர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யா கிர்கிஸ்தானுக்கு கடனாக வழங்க சம்மதித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 30 ஆயிரம் படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஒபமாவிற்கு ரஷ்யா கொடுத்திருக்கும் முதல் நெருக்கடி என்று சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவ தளமான மனஸ் என்ற இந்த தளத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரான்சைச் சேர்ந்த சுமார் 1000 இராணுவத்தினர் பணியில் உள்ளனர்.
0 comments