கடல்நீரிலிருந்து குடிநீர் பெற உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009
2/09/2009 01:57:00 AM //
இந்தியா,
குடிநீர்பிரசினை,
நீதிமன்றம்,
Court,
India,
WaterProblem
விஞ்ஞானிகள் அடங்கிய குழுவொன்றை ஏற்படுத்தி கடல்நீரை குடிநீராக மாற்றும் அதிக செலவற்ற தொழில்நுட்பத்தை கண்டறிய அரசு முயல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தண்ணீர் பிரசினை தீர்க்கப்படாவிட்டால் சமூகத்தில் அமைதியின்மை நிலவும் என்று கவலையும் தெரிவித்துள்ளது.
வழக்கு ஒன்றின் தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, அல்தாமஸ் கபீர் ஆகியோர் அடங்கிய குழு
"நாட்டில் தண்ணீர் பிரசினையை தீர்க்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது. சிறந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். நிர்வாகரீதியாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மாநில அரசுகள் செய்து தரவேண்டும். நாட்டின் குடிநீர் பிரசினையைத் தீர்க்க கடல்நீரை குடிநீராக மாற்றும் செலவற்ற தொழில்நுட்பத்தை கண்டறிய அவர்களை கேட்டுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்திய விஞ்ஞானிகள், வெளிநாட்டு நிபுணர்களின் உதவியையும் தேவைக்கேற்ப பெறலாம். தண்ணீர் பிரசினையால் மாநிலங்களுக்கிடையேயும் மோதல்கள் ஏற்படுவதால் ஒருநாள் கூட தாமதமின்றி அரசு இதில் முனைப்பு காட்ட வேண்டும்"என்று கூறியுள்ளனர்.
0 comments