காதலர் தின நிகழ்வுகள் : காவல்துறை உதவி ஆய்வாளர் இடைநீக்கம்
Published on சனி, 14 பிப்ரவரி, 2009
2/14/2009 06:42:00 PM //
இந்தியா,
காதலர் தினம்,
India,
Valentines day
பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகின் பல பகுதிகளிலும் சிலரால் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகள் இந்தக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உஜ்ஜைனிலும் ஹரியாணாவிலும் பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் ஒரு அறையில் ஒன்றாய் இருந்த காதலர்களை காவல் உதவி ஆய்வாளர் மூல ராம் என்பவர் அடித்துத் துன்புறத்தினார் என்ற புகாரை அடுத்து அவர் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணை முடிந்த பின் அவர் மீது மேலும் நடடிவக்கை எடுக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
உஜ்ஜைனில் அண்ணனும் தங்கையம் விக்ரம் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் வழியில் பஜ்ரங் தளத்தைச் சார்ந்த நால்வர் அவர்களிடம் பிரச்சனை செய்ததாக கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் நால்வரும் பஜ்ரங் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.
ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த சுமார் 600 பேர் கர்நாடாகா, மத்தியப் பிரதேசம் மற்றும் டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது செய்யப்பட்டனர்.
0 comments