திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி?
Published on சனி, 14 பிப்ரவரி, 2009
2/14/2009 07:11:00 PM //
இந்தியா,
தேர்தல் 2009,
மேற்கு வங்கம்,
Election 2009,
India,
West Bengal
திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
இன்று கொல்கத்தாவில் கூடிய மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி தலைமை தாங்கினார். மேற்கு வங்க காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் மோசினா கித்வாய் மற்றும் மாநில நிர்வாகிககள் பலரும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் சமீபத்தைய அரசியல் நிலை குறித்து விவாதிக்கப் பட்டது.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதீப் பட்டர்ஜி, மேற்கு வங்க மாநில மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் இந்த மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சி என்றும் கூறிய அவர், நிபந்தனைகளின் அடிப்படையில் அக்கடசியுடன் கூட்டணிக்கு முயல்வோம் என்றும் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். ஆனால் கடைசி நேரம் வரை காங்கிரசுக்காகக் காத்திருக்க மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறியிருந்தார்.
0 comments