பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷத்திற்கு எதிராய் பத்வா
Published on ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009
2/15/2009 07:46:00 PM //
அரசியல்,
இந்தியா,
உத்திரப் பிரதேசம்,
தேர்தல் 2009,
Election 2009,
India,
Politics,
Uttar Pradeshs
பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷத்திற்கு எதிராக பத்வா வெளியிடப் பட்டுள்ளது உத்திரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷமான "ஜெய் பீம்" என்பதை முஸ்லீம்கள் சொல்லக் கூடாது என்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அராபிக் மத்ரசா ஒன்றில் இன்று பத்வா ஒன்று வெளியிடப்பட்டது.
வாழ்த்து சொல்வதற்கு மதம் தடையில்லை என்றும் இந்த பத்வா தங்கள் கட்சி உறுப்பினர்களைப் பாதிக்காது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து கூறினார்.
நடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சிக்கு இந்த பத்வா உற்சாகமளித்துள்ளது. பகுஜன் கட்சியின் உறுப்பினர்கள் இந்த கோஷத்தைக் கூறுமாறு கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி கூறினார்.
0 comments