ஜார்ஜ் புஷிற்குப் பாரதரத்னா?
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷிற்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வி கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற விவகார அமைச்சருமான வயலார் ரவி, அவரின் கருத்துக்கு எதிராக கடுமையான விமர்சனம் தெரிவித்தார்.
பெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசும் பொழுது, "இந்திய-அமெரிக்க உறவை நெருக்கமாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக புஷிற்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும்" என்று சிங்வி கூறினார்.
"தனிப்பட்ட கருத்தாக இருந்தால் கூட, இது போன்ற கருத்துகள் கூறும் பொழுது காங்கிரஸ் பிரமுகர் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என வயலார் ரவி கூறினார். "இது போன்ற கருத்துகளைக் காங்கிரஸின் எதிரிகள் எதிர்மறையாக திரித்துப் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக"வும் அவர் கூறினார்.
"முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குப் பாரத ரத்னா வழங்குவதை எதிர்க்கவும் புஷிற்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும் என கோரிக்கை விடவும் செய்வது காங்கிரஸ் எப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக" பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
அதேநேரம், "பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தோ-அமெரிக்க பாரத்தின் சேர்மன் என்ற நிலையில் தான் தெரிவித்தத் தனிப்பட்டக் கருத்தை விவாதமாக்க முயற்சிகள் நடப்பதாகவும் புஷிற்குப் பாரத ரத்னா வழங்குவதற்காக தான் அதிகாரிகளுக்கு சிபாரிசு எதுவும் செய்யவில்லை" எனவும்சிங்வி ஏ.ஐ.சி.சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சரியான லூசுப்பசங்க, இவிங்க செய்யற காமெடிக்கு அளவில்லாமப் போச்சு.
பதிலளிநீக்குபாரதத்தின் இரத்தினம் என்று பொருள்படும் பாரதரத்னா வை இந்தியரல்லாத வெளிநாட்டவர்க்கு கொடுப்பது பெரும் வரலாற்றுப்பிழையாகி விடும். இந்தியச் சுதந்திரத்துக்கு அரும்பாடுபட்ட எல்லைகாந்தி் கான் அப்துல் கஃபார்கான், இந்தியப்பிரஜையாகி சேவையால் உயர்ந்த அன்னைத் தெரசா வரைக்கும் ஓகே!
புஷ்'ஷு' வாஜி'பேய்'க்கெல்லாம் கொடுக்கறதா இருந்தா வேற ஏதாச்சும் ஒரு நாய்க்கும் கொடுக்கலாம்.