'போர் நிறுத்தத்துக்குத் தயார்'- புலிகள் அறிவிப்பு
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது நடந்துவரும் கடும் சண்டையால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பை புலிகளின் அரசியல் தொடர்பாளர் நடேசன் ஐநாவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயாராக இருந்தாலும் ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்தத்தை இலங்கை இராணுவம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் புலிகள் ஆயுதங்களைக் கைவிடாமல் போர் நிறுத்தத்துக்கோ சமாதானப் பேச்சுகளுக்கோ இடமில்லை என்று இலங்கை இராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
மாபெரும் இன அழிப்பைச் செய்துவரும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் அமைதி காப்பது வியப்பளிப்பதாக நடேசன் கூறியுள்ள போதும், புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலேயே உயிரிழப்புகள் நேரிடுவதாக உதய நாணயக்காரா பதிலளித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு சிங்களமும் ஒத்துக்கொள்ளவேண்டும். இனியும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும்.
பதிலளிநீக்குஅமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் ஐநா சபையும் இலங்கையை போரை நிறுத்துமாறு வலியுறுத்தவேண்டும்.
//போர் நிறுத்தத்திற்கு புலிகள் தயார்//
பதிலளிநீக்குஇலங்கை அரசு தயாரில்லை.