பாக்: அப்துல்காதிர்கான் வீட்டுக்காவலிலிருந்து
Published on சனி, 7 பிப்ரவரி, 2009
2/07/2009 01:15:00 AM //
அணுவிஞ்ஞானி,
பாகிஸ்தான்,
வீட்டுக்காவல்,
Pakistan
அணு ஆயுத இரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக பாகிஸ்தானிய அரசால் குற்றம் சுமத்தப்பட்டு 4 வருடமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த விஞ்ஞானி அப்துல் காதிர்கானை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அவர் சுதந்திரமான மனிதர் என்று கூறியுள்ள நீதிமன்றம், பாகிஸ்தானுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரவும், ஆராய்ச்சிக்கூடத்திற்குச் செல்லவும், நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கவும் தடையில்லை என்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசுக்கும் அணுவிஞ்ஞானி அப்துல்காதிர்கானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன