தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை - உ.பி. முதலிடம்
Published on வியாழன், 29 ஜனவரி, 2009
1/29/2009 02:59:00 PM //
இந்தியா,
தலித்,
வன்கொடுமை,
Atrocities,
Dalit,
India
நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரப் பிரதேசத்தில்தான் அதிகம் நிகழ்வதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார். உத்திரப் பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் நிகழ்வதாகவும் அவர் கூறினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து விவாதிப்பதற்காக 5 மாநிலப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற அமர்வுக்குப் பின் அவர் இதைத் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலமும் தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்த வரிசையே இது என்றும் அவர் கூறினார்.
வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் வன்கொடுமைக்கு எதிரான புகார்களில் 39 சதவீதம் அளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. 71 சதவீத புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
நேற்று நடைபெற்ற இந்த அமர்வில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம், உத்தர்காண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலப் பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.
0 comments