காஸா : தொடரும் தாக்குதல்கள்
Published on புதன், 7 ஜனவரி, 2009
1/07/2009 03:47:00 PM //
உலகம்
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 670பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 3000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு மட்டுமின்றி இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் இஸ்ரேலிய இராணுவத்தினருடன் கடும் சன்டையில் ஈடுபட்டு வருவதாகவும் சுமார் 40க்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ சேதம் குறித்த உறுதிப்படுத்தப்படதாக தகவல்களே கிடைக்கின்றன. இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்ததப்பட்டதாகவும், 7 டாங்கர்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மொரிட்டீனியா, வெனிசுலா, எகிப்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதர்களை வெளியேற்றி உள்ளன. டென்மார்க் தனது நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
இஸ்ரேல் தன்னுடைய நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுவதைக் குறித்து கவலைப்படவில்லை என்று இஸ்ரேலிய ஜனாதிபதி சைமன் பெரஸ் கூறினார். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து இறங்கி உள்ளது. இதற்கான திட்டம் ஒன்றை நேற்று எகிப்து அதிபர் முபாரக் அறிவித்தார். இந்த திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் தற்போது கூடி விவாதித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சற்றுமுன் கிடைத்த தகவல்படி காஸாவின் கான் யூனுஸ் என்ற நகரிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறி இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments