இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது -
Published on புதன், 21 ஜனவரி, 2009
1/21/2009 05:20:00 PM //
இந்தியா
இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது என்றும் நம்முடைய பாதுகாப்பு வசதிகளை நவீனப்படுத்த வேண்டும் என்றும் இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.
இந்திய கடல் பாதுகாப்புக்காக அதிவேக கப்பலான சாம்ராட் என்னும் கப்பலை பணியமர்த்தும் நிகழ்வு இன்று நடந்தது. அப்போது பேசும்போது, நம்மிடம் இருக்கும் வசதிகள் போதுமானது இல்லை. நமக்குத் தேவையானதில் 30 சதவீதம் மட்டுமே நம்மிடம் உள்ளன. இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால் இந்திய கடல் பாதுகாப்பை அரசு நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். நம்முடைய இராணுவம் எந்நேரமும் செயல்படத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இராணுவத் தளவாட உற்பத்தி துறையின் இணை அமைச்சர், இந்திய கப்பல்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.