பிரதமருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை
இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை(AIIMS)யில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக இச்சிகிச்சை என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் P.K. பாண்டா தலைமையில் 11 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.
76 வயதான மன்மோகன், 18 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை ஃபைபாஸ் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார். மேலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் பெற்றுள்ளார்.
இதனால் சுமார் ஒருமாத காலம் மருத்துவ விடுப்பில் பிரதமர் இருக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் குடியரசு தினக் கொண்டாட்டங்களையும், பிரதமருக்கான மற்ற அலுவல்களையும் மூத்த அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி தலைமையேற்று நடத்துவார் எனத் தெரிகிறது. முன்னர் ப.சிதம்பரம் வசமிருந்த நிதிஅமைச்சர் பொறுப்பையும் திரு. முகர்ஜியே தற்காலிகமாக கவனிப்பாராம்.
0 comments