இஸ்ரேலுக்கு ஜெயலலிதா கண்டனம்
Published on சனி, 3 ஜனவரி, 2009
1/03/2009 12:44:00 PM //
உலகம்
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான ராணுவத் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போராட்டத்தில் மேலும் ஒரு மோசமான செயல் நடந்துள்ளது. என்னதான் ஆத்திரமூட்டும் செயல் நடந்தாலும் இந்த மாதிரியான அறிவீனமான ஆயுத தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது. இது இஸ்ரேல் நாட்டின் மீது சர்வதேச நாடுகளிடம் மோசமான எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது. எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. இஸ்ரேலின் இந்த ஈவு, இரக்கமற்ற தாக்குதலை யாராலும் நியாயப்படுத்த முடியாது. எந்த மதமும் இந்த செயலை ஆதரிக்காது. இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும். உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
0 comments