நமது வெற்றியை சிறுமைப் படுத்த முடியாது:ராஜபக்ஷே! Posted: 01 Apr 2012 02:15 PM PDT  நமது வெற்றியை சிறுமைப் படுத்த முயற்சிகள் நடக்கின்றன, அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.    |
கருப்புப் பணத்திற்கு எதிராக மீண்டும் யோகா குரு ராம்தேவ் Posted: 01 Apr 2012 01:33 PM PDT  யோகா குரு ராம்தேவ், கருப்பு பணத்திற்கு எதிராக ஜூன் 3-ம் தேதி தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.    |
ஐ.பி.எல் – 5 சாதிக்குமா சென்னை ஹாட்ரிக் வெற்றியை Posted: 01 Apr 2012 01:15 PM PDT  சென்னை : இந்திய கிரிக்கெட்டின் புதிய திருவிழாவாக பரிணாமம் எடுத்திருக்கும் ஐ.பி.எல்லின் 5வது ஆண்டு போட்டிகள் வரும் புதன் அன்று தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்நேரம் வாசகர்களுக்காக ஐ.பி.எல்லில் விளையாட உள்ள 9 அணிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அதன் சாதக பாதகங்கள் பற்றியும் பார்க்க உள்ளோம். அத்தொடரில் முதலாவதாக நடப்பு சாம்பியனான சென்னையை பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறோம்.    |
உண்ணவும், பேசவும் வரி அதிகரிப்பு இன்று முதல் Posted: 01 Apr 2012 10:27 AM PDT நடுவண் வரவு- செலவு திட்ட அறிக்கையின்படி இன்று ஏப்ரல் 1 முதல் தொலைபேசிக்கட்டணம், உணவகக் கட்டணம் ஆகியவற்றுக்கான சேவை வரி 10% லிருந்து 12 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 2% கூடுதல் வரிமூலம் இந்திய அரசுக்குக் கிடைக்கப்பெறும் கூடுதல் வருமானம் சுமார் 18,660 கோடிகளாம்.    |
மக்களுக்கான அரசா? மக்கள் விரோத அரசா? Posted: 01 Apr 2012 06:59 AM PDT  மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பார்கள் அது போன்றே தமிழக மக்களுக்கு ஒரு பக்கம் மத்திய அரசு ரயில் கட்டண உயர்வு, சேவை வரி உயர்வு , பெட்ரோல் விலை உயர்வு என உயர்த்திக் கொண்டே போக , மறு பக்கம் மாநில அரசோ பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு எனப் பாடாய்ப் படுத்தி வருகிறது.    |
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்-ஒருவர் பலி Posted: 01 Apr 2012 06:33 AM PDT  கோவை: சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிவந்த பன்றிக்காய்ச்சல் உலகம் முழுவதும் பல பகுதிகளில் பலரது உயிரைக் காவு வாங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது.    |
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு Posted: 01 Apr 2012 06:15 AM PDT  தமிழ்நாடு மற்றும் புத்துச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.    |
குவைத்திற்கு நெட்வொர்க் கேபிள் டெக்னிஷியன்கள் தேவை Posted: 01 Apr 2012 04:00 AM PDT  குவைத் : குவைத்தில் உள்ள ஒரு பிரபல ஐ.டி சர்வீஸ் நிறுவனத்திற்கு நெட்வொர்க் கேபிள் டெக்னிஷியன்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.    |
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்-திருமாவளவன் Posted: 01 Apr 2012 03:52 AM PDT  இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மின் கட்டண உயர்வை முழுமையாகத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதனைக் கண்டித்து வருகிற 5-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.    |
மீண்டும் தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் சேவை Posted: 01 Apr 2012 03:50 AM PDT  தூத்துக்குடி- கொழும்பு இடையே இம்மாதம் 19-ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தெரிவித்துள்ளார்.    |
ஜெயலலிதா- சசிகலா பிரிவு நாடகம் - சுப்ரமணிய சுவாமி Posted: 01 Apr 2012 03:43 AM PDT  அரசியல் அரங்கில் தனது அறிக்கைகளால் அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்தும் சுப்ரமணிய சுவாமி சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்து கடந்த நான்குமாதங்கள் வெளியேற்றியது நாடகம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.    |
"சசிகலாவுக்கு அம்னீஷியா" Posted: 01 Apr 2012 04:40 AM PDT  கோவாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 15 வரை அதிரடியாகக் குறைக்கப் பட்டுள்ளதே. அது போன்று தமிழ்நாட்டிலும் குறைக்கப் படுமா? - மாலதி, ராயப் பேட்டை |
தீர்த்தத்தில் சயனைடு கலந்து கொள்ளை! பெங்களூர் பெண்ணுக்கு தூக்கு! Posted: 01 Apr 2012 03:12 AM PDT  கர்நாடகாவில் மண்டியா,தும்கூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள கோவில்களுக்குவந்த பெண் பக்தர்களுக்கு கோவில் தீர்த்தத்தில் சயனைடு கலந்து அருந்தச் செய்து, அவர்களிடமிருந்த நகைகளைக் கொள்ளையடித்த பெண்ணுக்கு பெங்களூரு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.    |
தமிழக சிறை கைதிகள் இனி மேல் சுதந்திரமாக பேசலாம் Posted: 01 Apr 2012 02:24 AM PDT  சென்னை : புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் முன்பு போல் இனி திருட்டுதனமாக பேச வேண்டியதில்லை. அதிகாரபூர்வமாகவே அவர்கள் பேசுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்து உள்ளது. ஆம் விரைவில் டெலிபோன் பூத்துகள் சிறைகளில் அமைக்கப்பட உள்ளன.    |
பயங்கரவாதம் பற்றிய தமிழ்ப்படத்தில் அமிதாப் நடிக்கிறார் ! Posted: 01 Apr 2012 01:24 AM PDT தமிழ்த் திரைப்படத்தில் பாலிவுட் முன்னாள் நாயகன் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளாராம். தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள இத்திரைப்படம் பயங்கரவாதம் குறித்த கருப்பொருளைக் கொண்டது.    |
பெண் விவகாரத்தில் ராமஜெயம் கொலையா? முரணான தகவலால் குழப்பம்! Posted: 01 Apr 2012 12:43 AM PDT
திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் 3 தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கடத்திப் படுகொலை செய்யப் பட்டார்.    |
புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துக் குமரன் சாலை விபத்தில் பலி Posted: 31 Mar 2012 11:54 PM PDT புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக் குமரன் இன்று நடந்த சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.    |
ராமஜெயம் படுகொலையை அடுத்து கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல்! Posted: 31 Mar 2012 10:02 PM PDT |
அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி Posted: 31 Mar 2012 08:45 PM PDT  கராச்சி: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) பயங்கரவாதக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆஃபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.    |
அமெரிக்க இராணுவத்தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் Posted: 31 Mar 2012 08:42 PM PDT  ஆப்கானிஸ்தான்: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) ஆப்கானிய கிழக்குப் பிராந்தியத்தின் மெஹ்டார் லாம் எனும் இடத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தலைமையிலான இராணுவத்தளம் மீது ஏவுகணைத் தக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.    |
சட்ட விரோதப் படுகொலைகளை நிறுத்துக-- இந்தியாவுக்கு ஐ நா சபை அறிவுறுத்தல் Posted: 31 Mar 2012 08:33 PM PDT  டெல்லி:"காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்' என இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.    |
லண்டனில் மாபெரும் பேரணி:உலகெங்கும் ஒலித்த ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல்! Posted: 31 Mar 2012 08:28 PM PDT  லண்டன்: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) " ஜெரூசலத்தை நோக்கிய உலகப் பேரணி" என்ற தொனிப் பொருளில் ஆயிரக்கணக்கான மக்கள் லண்டன் மாநகரில் அணிதிரண்டனர்.    |
எதிர்ப்புப் பேரணியில் பங்குபற்றிய இளைஞர் படுகொலை Posted: 31 Mar 2012 08:25 PM PDT  காஸா: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) காஸா எல்லைக்கருகில் "ஜெரூசலத்தை நோக்கிய உலகப் பேரணி" என்ற தலைப்பில் 1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புக்குள்ளான நிலப்பகுதியை நோக்கி 'இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் பேரணி'யொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.    |