Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அராஜகத்தின் கொடும்பிடியில் ஐந்து சிறுவர்கள்

Published on செவ்வாய், 6 மார்ச், 2012 3/06/2012 09:17:00 AM //

நாம் சீனா அல்ல, பிரதமருக்கு ஆத்திரத்துடன் சிவில் சமூக தலைவர்கள் கடிதம்

Posted: 05 Mar 2012 11:47 AM PST

புது தில்லி : சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடும் சிவில் சர்வீஸ் குழுக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து வெளிநாட்டு உதவி பெறுவதாக கூறி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து நாட்டின் பிரபலங்கள் பிரதமருக்கு கோபத்துடன் கடிதம் எழுதியுள்ளனர்.


அராஜகத்தின் கொடும்பிடியில் ஐந்து சிறுவர்கள்

Posted: 05 Mar 2012 11:58 AM PST

கடந்த திங்கட்கிழமை (05.03.2012) அதிகாலையில் ஸில்வான் நகருக்குக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை, அப்பிரதேசத்தில் உள்ள பலஸ்தீனர்களின் வீடுகள்மீது கடும் தாக்குதல் நடாத்தியுள்ளது. 


அ தி மு கவுக்குத் திண்டுக்கல்; ம தி மு க வுக்கு சங்கரன் கோவில்!

Posted: 05 Mar 2012 10:37 AM PST

 

அ தி மு கவுக்குத் திண்டுக்கல்; ம தி மு க வுக்கு சங்கரன் கோவில்!எம் ஜி ஆர் அ தி மு கவைத் தொடங்கிய போது திண்டுக்கல் வெற்றி திருப்புமுனையாக அமைந்ததுபோல் சங்கரன்கோவிலில் ம தி மு க வெற்றி எமக்குத்  திருப்புமுனையாக அமையும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வை கோ கூறினார்.


உலகின் ஆயுதக் கிடங்காக மாறப்போகும் ஜப்பான்

Posted: 05 Mar 2012 07:38 AM PST

இங்கிலாந்துடன் இணைந்து ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதற்கான உடன்படிக்கையில் ஜப்பான் கையெழுத்திட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு முதல் ஆயுத உற்பத்திசெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜப்பானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தற்போது நீக்கப்பட்டுள்ளது.


உலகக்கோப்பை மகளிர் கபடி - ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம்

Posted: 05 Mar 2012 07:19 AM PST

முதலாவது உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா ஈரானை வீழ்த்தியது.பீகார் மாநிலத்தில் பாட்னா நகரில், பீகார் மாநிலம் உருவாகி நூறு ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், மகளிருக்கான உலகக் கோப்பை கபடி போட்டி நடைபெற்றது.


"வெள்ளத்தில் நாங்கள் மூழ்கிச் சாகவோ?" – மனங்குமுறும் மக்கள்

Posted: 05 Mar 2012 06:20 AM PST

"வயிற்றுப்பாட்டுக்காய் கூலிவேலைக்குக்கூட போகமுடியாதபடி இடையறாத மழை ஒருபுறம்; ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் அராஜக முற்றுகை மறுபுறம் என்று அன்றாட வாழ்வே மிகப்பெரும் கேள்விக்குறியாய் மாறிவிட்ட தவிப்பில் வாழ்கிறோம், நாம்.


ஐ.நா. கருத்தரங்கில் நடிகை குஷ்பு

Posted: 05 Mar 2012 06:04 AM PST

ஐக்கிய நாடுகள் சபையின்  இளைஞர் அமைப்பு சார்பில் கென்யா தலைநகர் நைரோபியில் பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்தரங்கு  மார்ச்  16,17 ஆகிய  தேதிகளில் நடைபெற உள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 05 Mar 2012 05:33 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}


சவூதியா: 120 இந்திய விமானிகளுக்கு வேலை வாய்ப்பு

Posted: 05 Mar 2012 05:14 AM PST

சவூதி அரேபியாவின் தேசிய விமானச்சேவை நிறுவனமான சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் 120 இந்தியவிமானிகளுக்கான வேலைவாய்ப்பை இந்திய நாளேடுகளில் விளம்பரப்படுத்தியுள்ளது.


திருப்பூர் ஆலுக்காஸ்ஜூவல்லரி கொள்ளை நகைக்கடை ஊழியர்கள் மூவர் கைது

Posted: 05 Mar 2012 04:46 AM PST

திருப்பூர் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் பத்து தினங்களுக்கு முன் சுமார் பத்துக் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள வைர , தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மிகத்திறமையான முறையில் போலீஸுக்கு சவால் விடும் வகையில் கேஸ் வெல்டிங் கருவிகள் மூலம் கடையின் இரும்பு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடித்துச் சென்றனர்.


மேற்கு இந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் விபத்தில் மரணம்

Posted: 05 Mar 2012 01:43 AM PST

மேற்கு இந்தியத் தீவின் கிரிக்கெட் வீரர் ருனாகோ மார்டன் வாகன விபத்தில் பலியாகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ரஷ்ய அதிபராக மீண்டும் புடின்

Posted: 05 Mar 2012 01:29 AM PST

ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பிரதமர் புடின் வெற்றி பெற்றுள்ளார்.விளாடிமிர் புடின் மூன்றாவது முறையாக ரஷ்யாவிற்கு அதிபராக பதவியேற்கிறார். ஐக்கிய ரஷ்யக் கட்சியைச் சார்ந்த புடின், எண்ணப்பட்ட 85 சதவிகித வாக்குகளில் 62 சதவிகிதத்தை பெற்றுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம்

Posted: 05 Mar 2012 12:25 AM PST

இன்று மதியம் டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரம் மதியம் 1.10க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


ஆசிரியர்களை வெறுக்கும் மாணவர்கள்

Posted: 04 Mar 2012 11:25 PM PST

சென்னயில் ஆசிரியை உமாமகேஸ்வரி  ஒரு மாணவனால் கொலை செய்யப்பட்ட பின் ஆசிரியர் மாணவர் உறவு பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது.ஆசிரியர்கள் எப்படி இருந்தால் மாணவர்கள் விரும்புவர் என்று, ஏழாம் வகுப்பில் படிக்கும் எஸ் ஏ கே அத்தால் அக்ரம் எனும் மாணவன்  எழுதிய  சிறப்புக் கட்டுரையொன்று நமது தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.


தலைப்புச் செய்திகள்(05/03/2012)

Posted: 04 Mar 2012 08:20 PM PST

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டதுஅமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது

"அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்.






Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!