Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு - சசி தரூருக்கு பிணை

கொச்சி : ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிந்து அரசியல்வாதியாய் மாறியுள்ள சசி தரூர் தேசியக் கொடியை அவமதித்ததாக் கூறி அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை வழங்கப் பட்டது. 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்று இரு நபர்களின் பொறுப்பேற்பு அடிப்படையில் மாவட்ட கூடுதல் தலைமை நீதிபதி கிருஷ்ணன் குட்டி பிணை வழங்கினார். மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப் பட்ட போது சசி தரூர் குறுக்கீடு செய்தார் என்று அவர் மீது மனித உரிமை ஆர்வலர் ஜாய் கைதரத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார்.

மும்பை தாக்குதல் விசாரனை : 109 சாட்சிகளை விசாரிக்க வேண்டும்

மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரனையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் கூறினார். அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிபுனர்கள் உள்பட பலரும் இதில் அடங்குவர்.

இந்த வழக்கில் மொத்தம் 1820 சாட்சியாளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்றும் ஆனால் அவர்களில் 109 பேரிடம் மட்டும் விசாரனை மேற்கொள்ள வேண்டும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறினார்.

கசாப் பஹீம் அன்சாரி மற்றும் சபாதீன் அகமது ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதற்கான காவல்துறை திரட்டிய வரைகலை ஆதாரத்தை நிகாம் சமர்ப்பித்தார். தீவிரவாதிகள் பயன்படுத்திய GPS கருவிகள் ஐந்து கைப்பற்றப் பட்டதாகவும் அவர் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!