ம.ம.க. கூட்டணி முடிவு நாளை அறிவிக்கிறது
மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழு நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய நிலைபாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப் பட்டுவிட்டதாகவும், இதனை நாளை சென்னையில் நடக்க இருக்கும் கட்சியின் செயற்குழுவில் அறிவிக்கும் என்றும் இன்று அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்த அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் ம.ம.க.வின் முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என்று கூறினார்.
தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி தர முன் வந்தததால் கூட்டணியில் சிக்கல் நிலவியது. பின்னர் தி.மு.க. இரு தொகுதிகளை ஒதுக்கித் தர முன்வந்துள்ளதாகவும், ஆனால் ம.ம.க. வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை ம.ம.க. ஏற்கவில்லை எனவும், மத்திய சென்னை, வேலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ம.ம.க. தனித்துப் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
புலிகலின் பலம் ஒரு புதிர்...
பதிலளிநீக்குபுதிர் அவிழும்போது....சுமார் 35,000 சிஙகள கூலிப்பட்டாலம் பொட்டலம் கட்டப்பட்டிருக்கும்....