Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர்: 514 கோடி ரூபாய் சொத்து!

Published on வெள்ளி, 10 ஏப்ரல், 2009 4/10/2009 11:35:00 AM // , , , , ,

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கிம்ஜி படாடியா தன்னுடைய சொத்து ரூபாய் 514 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் தகவல் தந்துள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக சொத்துடைய வேட்பாளராக இவர் அறியப்பட்டுள்ளார்.

சுரேந்திர நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர் தன்னுடைய அசையும் சொத்துகளின் மதிப்பு ரூபாய் 255 கோடி என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூபாய் 259 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

41 இலட்சம் மதிப்புடைய மெர்சிடீஸ் பென்ஸ் உள்பட நான்கு கார்கள், சுமார் 50 இலட்சம் மதிப்புள்ள 1.05 கிலோ தங்கம், மகாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் சில இடங்களில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூபாய் 208 கோடி மதிப்பிலான மற்றவகை நிலங்கள் என்று தன்னுடைய அசையும் மற்றம் அசையா சொத்துகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

தன்னுடைய கல்வித்தகுதியாக அவர் எஸ்.எஸ்.சி. (பத்தாம் வகுப்பு) யையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

1 கருத்து

  1. இந்த தேர்தலில் வெற்றி.......
    ஏழைகளின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவோன்
    மண்னிக்கவும்
    எனது முன்னேற்றத்துக்காக பாடுபடுவோன்

    அடுத்த தேர்தலில், தேர்தல் ஆணையத்திடம் எனது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூபாய் 2550 கோடி என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூபாய் 2590 கோடி என்றும் ..........

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!