மஹாதிர் மீண்டும் UMNO கட்சியில் சேருகிறார்
மலேசியாவின் முன்னாள் பிரதமர், டாக்டர் மஹாதீர் முஹம்மது மீண்டும் UMNO கட்சியில் சேருவதாக அறிவித்துள்ளார்.
நேற்று நடந்து முடிந்த அக்கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், விரைவில் கட்சியில் இனைவதாக உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலிக்கிடையே அறிவித்தார். கடந்த ஆண்டு, இப்போதைய பிரதமர், அப்துல்லாவின் செயல்கள் மற்றும் அரசின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்து இருந்த டாக்டர் மஹாதீர், UMNO கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அறிவித்து இருந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து, அரசினை வெளிப்படையாக விமரிசித்து அப்துல்லா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது குறிபிடத்தக்கது.
இவர் வருவது மலேசியாவுக்கு நல்லது ஆனால் சீன/இந்தியருக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குசீனர்கள் அவ்வளவாக இவரை விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கேன்.