மத உணர்வுகளைப் புண்படுத்துவது கட்சியின் கலாச்சாரம் இல்லை - பா.ஜ.க.
மத உணர்வுகளைப் புண்படுத்துவது பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரம் இல்லை என்றும், தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் பேசிய பேச்சின் விளைவால் எழுந்துள்ள விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் வருண், அங்கு நடந்த கூட்டமொன்றில் பேசிய போது, (தமது கையை உயர்த்தி) 'இது "கை" (காங்கிரசின் சின்னம்) இல்லை. தாமரையின் (பா.ஜ.க. சின்னம்) சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம்' என்று குறிப்பிட்டார்.
மற்றொரு கூட்டத்தில் பேசிய வருண், "எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை நீட்டினால் அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள், தலைமை இல்லாதவர்கள் என்று எவரேனும் எண்ணினால், எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை உயர்த்தினால், பகவத் கீதை மீது ஆணையாக அந்த கையை நான் வெட்டுவேன்" என்றும் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//மத உணர்வுகளைப் புண்படுத்துவது பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரம் இல்லை//
பதிலளிநீக்குகாமடி செய்கிறான்கள் காமடியன்கள்!
**இது முஸ்லிம்களின் தலையை வெட்டும்.**
பதிலளிநீக்குஏன் இந்தக் கொலைவெறி? இது ஜனநாயகநாடு தானா? நேரு குடும்ப அங்கத்தினரின் வாயிலிருந்தா இந்தச் சொல்? அதிர்ச்சியாக உள்ளது!
PARAMS,
பதிலளிநீக்குஒரு தவறை இன்னொரு தவறால் பூசி மெழுகாதீர்கள்.
ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு சமூகத்தின் மீதே கொலைவெறிமிக்க வருண்காந்திகளையும் மோடிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதே நாட்டுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் நல்லது.
பார்ஸியான ஃபெரோஸ்காந்தேவின் மகனான ஸஞ்சய் காந்தே, இந்திரா காந்தேவின் நெருக்கடி நிலை ஆட்சியில்,"இம்மாபெரும் தேசத்தின் தலைநகரான டெல்ஹியில் இன்னொரு பாகிஸ்தானை நான் விரும்பவில்லை" என்று தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
பதிலளிநீக்குபார்ஸியான ஸஞ்சய்க்கும் சீக்கியப் பெண்ணான மனேகாவுக்கும் பிறந்த வருண்காந்தே இப்போது, இந்துக்களின் பாதுகாவலனாகப் புது அவதாரம் எடுத்து,"முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டும்
" என்று பேசுகிறார்.
இந்தக் காந்தேவின் பாட்டி இந்திரா காந்தேயை, "இந்துவல்லள்" என்று கூறிக் கேரளத்தின் குருவாயூர் அம்பலத்தில் நுழைய அனுமதிக்கவில்லை என்ற வரலாறு அறியாது இந்துக்களுக்காகப் பேசும் சிறுபிள்ளையின் பேச்சை பா.ஜ.க.தனது கருத்தன்று எனக்கூறி மறுத்துள்ளது.
காந்தேக்களை "காந்தி" எனக்கூறி வரலாற்றுப் புரட்டு செய்யும் கூட்டம் உள்ளவரை "பாரத்மாதா கீ ஜே"