ஜப்பானில் கார்கோ விமானம் நொறுங்கி
Published on திங்கள், 23 மார்ச், 2009
3/23/2009 09:19:00 AM //
உலகம்,
விமான விபத்து,
ஜப்பான்,
fedex,
japan,
Plane Crash,
World
பெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கார்கோ விமானம் ஒன்று டோக்கியோ அருகே நொறுங்கி விழுந்தது. அதில் பயணித்த இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் குவாங்சோ விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு இந்த விமானம் வந்து கொண்டிருந்த போது நாரிடாவில் வீசிய வேகமான காற்றால் இந்த விமானம் நொறுங்கி விழுந்து தீபிடித்ததாகவும், தீயை அணைக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவைச் சார்ந்த விமான ஓட்டியும், துணை ஓட்டியும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக உறுதி செய்யப் பட்டது.