கட்சிக்கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் ஜெட்லி
பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் அருண்ஜெட்லி. இன்று பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் டில்லியில் கூடி ஆந்திரா, குஜராத், டில்லி மற்றும் உ.பி., மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை அருண்ஜெட்லி புறக்கணித்தார். மார்ச் 13ம் தேதி நடந்த கூட்டத்தையும் ஜெட்லி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் அருண் ஜெட்லிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் அதிகரித்து வருவதையே இது குறிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னதாக அருண் ஜெட்லியைச் சந்தித்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. பாரதீய ஜனதா கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க ஆர். எஸ். எஸ். அமைப்பும் முயற்சிகளை மேற்கெண்டு வருகிறது.
0 comments