சொந்த தயாரிப்பில் இரான் செயற்கை கோள் அனுப்பியது
Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009
2/03/2009 06:10:00 PM //
இரான்,
உலகம்,
செயற்கை கோள்,
விஞ்ஞானம்,
Iran,
Sattelite,
Science,
World
இரான் முதன் முறையாக தன்னுடைய நாட்டில் தயாரான செயற்கைக் கோளை இன்று காலை விண்ணில் ஏவியது. ஒமிட் (நம்பிக்கை) என்று பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் சபீர் 2 என்ற உள்நாட்டில் தயாரான ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இரானில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.
2005ஆம் ஆண்டு இரானின் செயற்கைக் கோளை ரஷ்யா விண்ணில் ஏவியது. பின்னர் சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து 2008 ஆம் ஆண்டு செயற்கைக் கோளை ஏவியிருக்கிறது.
0 comments