கருக்கலைப்புச் சட்டம் : மத்தியர அரசுக்கு உச்சநீதி மன்றம் அறிவிக்கை
Published on வெள்ளி, 13 பிப்ரவரி, 2009
2/13/2009 03:48:00 PM //
இந்தியா,
கருக்கலைப்பு,
மும்பை,
Abortion,
India,
Mumbai
கருக்கலைப்புச் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கை அனுப்பியுள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து, உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமயிலான அமர்வு இந்த அறிவிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
ஹரீஷ் மேத்தா மற்றும் நிகிதா தம்பதியினருடன் மருத்துவர் நிகில் டாடர் இந்த வழக்கைத் தொடர்ந்தார். முன்னதாக கடந்த ஆண்டு, நிகிதாவின் முதல் கருத்தரிப்பின் போது கருவில் இருந்த 24 வாரக் காருவின் இதயத்தில் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனைக் கலைக்கக் கோரப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.
0 comments