இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளாக பெண்கள்
இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப் படுவார்கள் என்று இன்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சுமார் 100 பெண்களை துணை ஆய்வாளர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளோம். நியமனப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நியமனம் முடிந்ததும் அவர்கள் பயிற்சிக்காக அனுப்பப் பட்டு பின்னர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்று இரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மொத்தம் 1000 துணை ஆய்வாளர்களை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர்களில் 10 சதவீதம் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சுமார் 70 ஆயிரம் பேரைக் கொண்ட இரயில்வே பாதுகாப்புப் படையில் 800 பெண்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் போன்ற பொறுப்பிலேயே இருந்து வருகின்றனர்.
0 comments