கிளின்டனின் அமைப்புக்கு அமர்சிங் அளித்த நன்கொடை குறித்து விசாரிக்க கோரி மனு
Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009
2/09/2009 10:09:00 PM //
அரசியல்,
இந்தியா,
சமாஜ்வாதி,
தேர்தல் ஆணையம்,
Election Commission,
India,
Politics,
Samajwadi
சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கிளின்டனின் நல அமைப்புக்கு கருப்புப் பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலம் நன்கொடையாக அளித்தார் என்று தேர்தல் ஆணையத்திடம் இன்று புகார் அளிக்கப் பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் தன்னுடைய நிகர வருமானமாக 37 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ள அமர் சிங், கிளின்டனின் நல அமைப்புக்கு (10 மில்லியன் டாடலர்) 43 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள சதுர்வேதி, இவற்றை எங்கிருந்து அளித்தார்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இந்த தொகையை தன்னுடைய வருமான வரி கணக்கின் போது காட்டினாரா? இத்தகைய வெளிநாட்டு பரிவர்த்தனையின் போது பெற வேண்டிய ரிசர்வ் வங்கியின் அனுமதி எதனையும் அவர் பெற்றாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் புகாரை ஜனவரி 30ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சதுர்வேதி சமர்ப்பித்தார். இவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருப்பதால் ராஜ்ய சபா அலுவலரிடம்தான் இந்தப் புகாரை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதால் புகாரின் நகல்களை இன்று பத்திரிகையாளர்களிடம் அளித்தார்.
விசுவநாத் சதுர்வேதி என்பவர் இன்று அளித்த புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கூறி பொது நலவழக்கு தொடர்ந்தார்.
0 comments